Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாதி இல்லை... மதம் இல்லை... மதுரையில் ஒரு விநோத மீன்பிடி திருவிழா!

துரை மாவட்டம் மேலூர் அருகே,  மேலவளவு கிராமத்தில் மீன் பிடி திருவிழா நடந்தது. அங்கு காவல் தெய்வமாக வணங்கப்படும் கருப்பு கோயில் முன்பாக இருக்கும் பரம்பு கண்மாயில் நடந்த இந்த விழாவில்,  மதுரை சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்காணோர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் புதுமையான,  விநோதமான முறையில் பல திருவிழாக்கள் கொண்டாடுவார்கள். பிரிகட்டும் விழா, எருது கட்டு திருவிழா, புரவை அடுப்பு திருவிழா, வைக்கோல் பிரி திருவிழா, மாம்பழம் உண்ணும் திருவிழா, புட்டுத்திருவிழா, வெற்றிலை பிரி திருவிழா, கலப்பை கட்டுத்திருவிழா, பனியாரம் சுடும் திருவிழா, சாராயம் படைத்து திருவிழா என்று பல திருவிழாக்கள் மதுரையில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மீன் பிடி திருவிழாவும் மதுரையில் பல கிராமங்களில் நடக்கும்.

இவ்விழா பற்றி நம்மிடம் பேசிய ரமேஷ் என்பவர், “வருடா வருடம் கருப்பசாமிக்கு கார்திகை மாதம் விழா எடுப்பது வழக்கம். அப்போது தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டு, சேவல் அறுத்து படையல் செய்வது, பொங்கல் வைத்து மொட்டை போட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டுவது என பலவற்றை  செய்வார்கள்.

அந்த வரிசையில் விவசாயம் செழிக்கவும்,  குடும்பம் நன்றாக இருக்கவும்,  கண்மாயில் மீன்குஞ்சுகள் விட்டு வேண்டிக்கொள்வார்கள். அப்படி விடப்பட்ட மீன்கள் வளர்ந்த நிலையில்,  கண்மாயில் மீன் பிடிக்க சரியான காலநிலை பார்த்து ஊர்ப்பெரியவர்கள் முடிவு செய்வார்கள்.

விழா துவங்கியவுடன் அம்பலக்காரர் வெள்ளைக் கொடியை அசைப்பார். அனைத்து பொதுமக்களும் கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடிப்பார்கள். அப்போது அனைவரும் உற்சாகத்துடன்  கத்திக்கொண்டு சந்தோஷமாக இறங்குவார்கள். ஆனால் இங்கு அனைவருக்கும் மீன் கிடைக்கும் என்று  சொல்லிவிட முடியாது. இருந்தாலும் கருப்பசாமியின் அருள்கிடைக்கும் என்பதற்காக மீன் பிடிக்க இறங்குவார்கள்.

வலையில் கிடைத்திருக்கும் மீனை வீட்டிற்கு கொண்டு சென்று,  இறைவனிடம் வேண்டிக்கொண்டு படைத்து பிரசாதமாக உண்ணுவார்கள்

இந்த திருவிழாவின் சிறப்பு அம்சம்,  இதில் மதம் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்வது" என்றார்.

இன்னும் சிலர்,  "இது எங்கள் நம்பிக்கை மட்டுமின்றி வேறுவகையில் இது எங்களுக்கு பயன்தரும் விழா. காரணம் இப்படி பாரம்பர்யமான மீன்பிடி திருவிழாவை நடத்தாவிட்டால்,  கண்மாய் ஏலத்திற்கு வந்துவிடும் அபாயம் உள்ளது. கண்மாயில் நீர் ஆதாரம் அழிந்துவிடும். மேலும் பாரம்பர்யமும் கொலை செய்யப்படும். திருவிழா நடத்துவதன்மூலம் அவற்றை தவிர்க்கிறோம். எங்கள் பகுதியில் ஜாதி மத வேறுபாடின்றி வாழவும் இந்த விழா வழிசெய்கிறது. இதனால் இந்த திருவிழா வருடா வருடம் தொடர்ந்து நடக்க எப்போதும் முனைப்பாக இருப்போம்" என்றனர்.

மதுரை சுற்றுப்புற கிராமங்களில் இருந்து லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் என மக்கள் படையெடுத்து வந்து திருவிழாவை கண்டுகளித்துசென்றனர். மக்களை ஒருங்கிணைக்கும் இந்த விழா ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது..

- சே.சின்னதுரை

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close