Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த ஃபேஷன் ஷோ கொஞ்சம் ஸ்பெஷல்... ரொம்ப புதுசு!

திருநங்கைகளுக்கான உரிமைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முன்னோட்டமாக நடந்து முடிந்திருக்கிறது திருநங்கைகள் மட்டுமே கலந்துகொள்ளும் ஃபேஷன் ஷோவிற்கான ஆடிஷன்.

மித்ரா ட்ரஸ்ட் என்ற LGBT அறக்கட்டளையின் நிறுவனரான ருத்ரானி செட்ரி என்பவரால்,   திருநங்கைகளுக்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் மாடலிங் நிறுவனத்தால் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்டது இந்த ஆடிசன்.

ருத்ரானி செட்ரி இது பற்றிக் கூறும் போது, “அழகான தோற்றமுள்ள திருநங்கைகள் கூட இந்த சமூகத்தின் பாதிப்புகளால் அசிங்கமானவர்களாகப் பாவிக்கப்படுகிறார்கள். இதை மாற்ற என்ன செய்யலாம் என யோசித்ததன் விளைவே இந்நிறுவனம். தன் குடும்பம், பணியிடம், அக்கம்பக்கத்தவர்கள் என அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டு கடைசியில்,  வேறு வழியின்றி பாலியல் தொழிலாளர்களாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள். இந்நிறுவனம் அத்தகைய இழிநிலையையும் அவர்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வையையும் மாற்றுவதற்கான ஒரு தளமாக அமையும் “ என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இந்த ஆடிஷன் மூலமாக முதல் ஐந்து மாடல்களை தேர்வு செய்து,  அவர்களை முக்கிய ஃபேஷன் ஊடகங்களில் மின்னச் செய்வதே இவர்களின் நோக்கம்.

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டும் புகைப்படக்காரருமான ரிஷி ராஜ், “புது ட்ரெண்ட்களை உருவாக்குவதிலும் எல்லைகளை தகர்த்தெறிவதிலும் முனைப்பாக இருக்கிறது ஃபேஷன் உலகம். அந்த வகையில் சமீபத்திய ஹிட்டான ப்ரூஸ் ஜென்னர் (கேத்லின் ஜென்னர்) எனும் மாடல்,  பாலியல் மாற்றம் செய்துகொண்டவர். அது போல இந்திய மாடல்களும் உலகத்தினரால் ஏற்கப்படுவார்கள்” என்றார்.

மாற்றம்! முன்னேற்றம்!!

-நிவேதா அ.
(மாணவர் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close