Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது டெக்னிக்கல் யுகம்- கலக்கும் மாணவர்கள்!

ண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள குருஷேத்ரா தொழில்நுட்ப திருவிழாவையொட்டி பல மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக்  காட்சிக்கு வைத்துள்ளனர். 57 மாணவர்கள் உருவாக்கியுள்ள வெவ்வேறு துறை சார்ந்த  13 கண்டுபிடிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

காற்றிலேயே லாக் :

ஃபோனில் லாக் போட பேட்டர்ன் பயன்படுத்தி தானே கேள்விபட்டிருப்பீர்கள், இதையே வங்கி பெட்டகங்கள் கதவுகளுக்கும் பயன்படுத்தும் முறைதான் ஏர் லாக். காற்றிலேயே பேட்டர்னை வரைந்தால் வைக்கப்பட்டுள்ள இன்ஃப்ரா ரெட் சென்ஸார்கள் அதனை அறிந்து சரியான பேட்டனுக்கு மட்டும் பூட்டு திறக்கும். இதனை ஒரு செயலி மூலம்  மிக எளிதாக பயன்படுத்த முடியும் என செய்து காட்டியிருக்கின்றனர் செய்யத் ஹமீத், முபீத்,  பிரபாகரன், முத்து பழனியப்பன், சிரில் ஜான்சன், ஆகாஷ் மற்றும் பார்த்திபன்.

படிக்கட்டில் பயணம் வேண்டாமே :

படிக் கட்டில் பயணம்  ஆபத்து என்றூ எவ்வளவு தான் கூறினாலும் யாரும் கேட்பதில்லை, படிக் கட்டில்  யாரேனும் இருந்தால் செல்லாத பேருந்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் மாணவர்கள் விக்னேஷ்வரன், சுரேஷ் குமார், அருள் ரோஜா, நந்தினி மீனாட்சி. இதற்கு பெயர் எஃப் ஏ பி எஸ். பயணிகள் இறங்குவதோ ஏறுவதோ தெரியாமல் பேருந்தை எடுப்பதால் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்கலாம். இதனுடன் கூடிய ஒரு செயலியையும் கண்டுபிடித்து உள்ளனர். அதன் மூலம் பேருந்து நிறுத்ததிற்கு வரும் நேரம் மற்றும் காலியாக இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையையும் கண்டுபிடிக்கலாம்.

குழந்தைகளைப்  பாதுகாக்க:

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் மற்றும் சுவாசக்கோளாறுகளை கண்டுபிடிக்க  அப்னியா மானிட்டர் கண்டுபிடித்துள்ளனர் மாணவர்கள் சித்ரா, கீர்த்திகா, தேவ சுந்தரம். குழந்தைகளுக்கு இதனை பெல்ட் போல மாட்டி அதனை மானிட்டருடன் இணைத்தால் குழந்தைக்கு சுவாச பிரச்னை வந்தால் உடனே அதில் ப்ரோக்ராம் செய்யப்பட்ட தொலைபேசி எண்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

குளத்தை சுத்தம் செய்யும் அஷீரா:


தற்போதைய பெரிய பிரச்னை என்னவென்றால் நீர் நிலைகளை பராமரிக்காததுதான். அதற்கான தீர்வு தான் அஷீரா. ஏரி குளங்களை  சுத்தம் செய்ய பயன்படுத்தகூடிய இந்த கருவி தானாக இயங்கும். தண்ணீரில் இருக்கும் எல்லா குப்பைகளையும் சுத்தம் செய்து தனது கூடையில் போட்டுக் கொள்ளும். இதனை உருவாக்கியிருப்பது நீஹாரிக்கா, உமா பாரதி,பழனியப்பன்.

உயிர்க் காக்கும் கருவி :

சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் வருடத்திற்கு பல ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர். தக்க முதலுதவி சரியான நேரத்தில் கிடைத்திருந்தால் அவர்களை காப்பாற்றியிருக்க கூடும். விபத்தின் போது தானியங்கி மூலம் அசர ஊர்திக்கு தகவல் அனுப்பும் ஒரு கருவியைக்  கண்டுபிடித்து இருக்கிறார்கள் அறிவரசி, ஜானகி ராம், கீர்த்தனா, பிரிய தர்ஷினி.

உளவு ரோபாட் :

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் தானே உளவு பார்க்கும் கருவிகளைப்  பார்த்திருப்பீர்கள். உளவு வேலைக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர் பிரபு ராஜ், நிஷா சிங், கௌசல்யா,சுபாஷினி. இதில் பொருத்தியுள்ள கேமராவை கொண்டு பல மீட்டர் தூரத்தில் இருந்தே கண்காணிக்கலாம். ஆமை வடிவத்தில் இருப்பதால் எளிதாகக்  கண்டறிய முடியாது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் இந்த ரோபோட் கண்காணிப்பிற்கு பெரிதும் உதவும்

சுத்தம் செய்யும் ரோபோட் :

ஸ்வச் ரோபோட் என அழைக்கப்படும் இந்த ரோபோட் சாலைகளை சுத்தம் செய்ய உதவும். சின்ன சின்ன தூசிகளை கூட சுலபமாகச்  சுத்தம் செய்யலாம். எந்த விதமான பரப்பிலும் சுத்தம்  செய்ய ஏற்றவாறு மாற்றியமைத்துக்  கொள்ளலாம். இதனை உருவாக்கியிருப்பது வீணா பிரியலக்‌ஷ்மி, கிரண் பிரனேஷ், விக்னேஷவரன், சங்கர சுப்பிரமணியன்

ஸ்மார்ட் ஆட்டோ:

மீட்டர் பயன்படுத்தும் ஆட்டோவை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. அதனைக்  கட்டுபடுத்த ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கின்றனர் தீபிகா, லதா, பொற்கொடி, சரவண குமார், சஞ்சனா, மாளவிகா. இதன் மூலம் ஆட்டோவில் ஏறீ அமர்ந்து 30 வினாடிகளுக்குள் மீட்டரை ஆன் செய்யாவிட்டால்  வாகன எண், ஓட்டுநரின் பெயர், வண்டி இருக்கும் இடம் அடங்கிய ஒரு மெசேஜ் போக்குவரத்து காவல் துறைக்கு அனுப்பப்படும். இதனுடன் கூடிய ஒரு செயலியும் உள்ளது அதன் மூலம் சென்னை சுற்றி  பார்க்க விரும்புவோருக்கு அருகில் இருக்கும் முக்கிய இடங்களின் விவரங்கள் அனுப்பப்படும்.

தேங்காய் எண்ணும் இயந்திரம் :

தென்னந்தோப்பில் தேங்காய்களை எண்ண உதவும் கருவியைக்  கண்டுபிடித்து உள்ளனர்  ஹரிதா, ரம்யா, ஜெயஶ்ரீ.

ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் :

வண்டியில் செல்லும் போது பிரேக் அழுத்தினால் வண்டி சறுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதனை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பிரேக்  அமைப்பு. ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் அமைப்பை குறைந்த செலவில் உருவாக்கி  காண்பித்து இருக்கிறார்கள் சபரீஷ், அஷ்வின்ஜி, ஹரிஹரன், மார்க் பெஞ்சமின்.

நிலம் தேடும் செயலி :

சென்னையில் வீடு அல்லது நிலம் தேடி அலைவது பெருந்துயரம். அந்த சுமையை குறைத்து எளிமையாக்க உருவாக்கப்பட்டிருக்கும் செயலி தான். லேண்ட் ஃபைண்டர். இதன் மூலம் எந்த இடத்தில்  நீர்வளம் எப்படி இருக்கிறது, அருகாமையில் என்ன வசதிகள் உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து என்ன உயரத்தில் உள்ளது என்பதையும் கண்டுபிடிக்கலாம். இனிமே யாரும் சென்னைக்கு மிக அருகில் என்று ஏமாற்ற முடியாது. இதனை உருவாக்கியிருப்பது ஹரி ஹர கணேஷ், பாலாஜி, கிரண் குமார்.

 டெக்ஸ்டர் பாட்:

குருஷேத்ராவின் அடையாளம் இந்த டெக்ஸ்டர்தான். அதனையே ரோபோட்டாக உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர்கள் பிரசன்ன வெங்கடேஷ், திருநாவுக்கரசு, கிருஷ்ணா பாலாஜி, ரகுராமன், சபரீஷ் குமார், கௌத்தமன். இது வரும் விருந்தினர்களை வரவேற்கும். கேமரா மூலம் படமெடுத்து அதனை லைவாக பார்க்க முடியும்.

 பிளாஸ்டிக் பாட்டில் கிரஷர்:

எங்கே பார்த்தாலும்  குளிர்பானம் அருந்தி தூக்கியெறிந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் இருக்கின்றன். அதனை எரிப்பது சுற்று சூழலுக்கு கேடு அதனை சரியாக நசுக்கி மறு பயன்பாட்டிற்கு தயார் செய்ய வேண்டும். அது தான் கேன் கிரஷர். இந்த இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில்களை மட்டும் நசுக்கும், பதிலுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றுக்  கொள்ளலாம். இதனை பொது இடங்களில் வைத்தால் பலரும் பயன்படுத்த முன் வருவர் என்கின்றனர் இதனை கண்டுபிடித்த  ஹரிபிரகாஷ், இமாம் அலி அஹ்மெத், சஞ்சனா, ஷோபனா

-ஐ.மா.கிருத்திகா

படங்கள் : உ.கிரண் குமார்

( மாணவ பத்திரிகையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close