Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வன் பட ஸ்டைலில் ஒருநாள் மேயரான அமெரிக்க நாய்

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ரீனோ மாநகரில், கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 11) அன்று உலகையே ஆச்சரியப் படுத்தும் ஒரு நிகழ்வு அரங்கேறியது.

உலகில் உள்ள வாய் இல்லா பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாம் தினந்தோறும் பல சமூக வலைதளங்களில் பார்த்து வருந்திக் கொண்டிருக்கும் ஒன்றே. நீர் வாழ் உயிரினங்களுக்கு கடலும்,ஆறும், குளமும் உள்ளன. வேட்டையாடும் விலங்குகள் காடுகளில் வாழும். சில வகை கால்நடைகள் நம் வீடுகளில் வளர்க்கப்படும். ஆனால், அதிலும் சில, கவனிப்பு கிடைக்காமல், வீடு உணவின்றி சாலைகளிலும், பாலங்களுக்கு அடியிலும் சுற்றித் திரிந்து. வாகனங்களில் விபத்து ஏற்ப்பட்டு இறந்து போகும். மற்றவை போல, இவற்றிற்க்கும், பாதுகாப்பான இருப்பிடம் பெற உரிமை உண்டு. பூமி அனைத்து உயிரிங்களுக்கும் வீடு.

இதனை உணர்த்த லிசா ரோசன் மற்றும் ராபர்ட் ஸ்டேச்சோ தங்களுடைய 5 வயது எவரெட் நாய்க்காக எஸ்.பி.சி.ஏ (Society for Prevention of Cruelty to Animals)  நடத்திய ஏலத்தில் பங்கேற்று, ஆயிரம் டாலர்கள் வைத்து வெற்றி பெற்றனர். ஏலம், ரீனோ நகரின் ஒரு நாள் மேயர் பதவிக்கு. பெரிய புள்ளிகளும் பிரபலங்களும் மட்டுமே பயன்படுத்தும் லிமௌசின் காரில் எவரெட் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
 
புதிய மேயராக தேர்ந்தெடுக்கப் பட்ட எவரெட் நாய், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரேடர் வகையின் ஒரு கலவை. எவரெட் தனக்கு வழங்கப் பட்ட மேஜர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டது. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த மேயர் ஹிலாரி ஷீவ், மாநகரக் கழகத்தின் சார்பில், அதன் பதவி ஏற்ப்பிற்கு அதிகாரப் பூர்வமான பிரகடனம் செய்தார்.

பின்னர் பேசிய எஸ்.பி.சி.ஏ குழு, வீடில்லா விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த முயற்சி எடுத்துள்ளதாகக் கூறினார். 

அந்த நாள் முடிவில், எவெரெட் மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. அதனுடைய இந்தப் பணிக்கு, ஓய்வுச் சலுகைகளும் வழங்க வடக்கு நெவாடாவின் எஸ்.பி.சி.ஏ செயற்குழு இயக்குனர் முடிவு செய்துள்ளார். இதில், ஒரு நாய்ப் படுக்கை, சாப்பாட்டுக் கின்னம், ஒரு பரிசு மற்றும் 60 பவுண்ட் நாய் உணவும் வழங்கப் படவுள்ளது.

இது உலகளவில் வீடில்லா பிராணிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்தும் என்பது இவர்களின் நம்பிக்கை

மு.சித்தார்த் (மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ