Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோஸ் கட் கிஃப்ட்ஸும்; நொந்து போகும் பாய்ஸும்

பிப்ரவரி மாதம் வந்தால் போதும் ஆள் இருக்குற ஆள் எல்லோரும் ஒரு மாதிரியாக சுற்றுவார்கள். "கிப்ட்" வாங்குவதற்கென்றே வேலைகளை விட்டுவிட்டு சுற்றும் ஆட்களும் உண்டு. இதில் நல்லபடியாக் பரிசு வாங்கி தருவது சில பேர் தான், பரவலாக பல பேர் பரிசு தருகிறேன் என்று சொதப்பிவிடுவது தான் காதலர் தினத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். அதிமுக்கியமாக நம்ம பயலுக சொந்தமா பரிசு செய்யரேன்னு சொல்லிட்டு செய்யும் ரவுசு இருக்கே, தாங்கல. அப்படிப்பட்ட "படைப்பாளிகள்" சிலரது வாழ்க்கை சம்பவங்கள் கீழே.

 
கவிதை:

அது என்னமோ தெரில காதலிக்க ஆரம்பிச்சாலே கவிஞனா மாறிடுறாங்க நம்ம ஊரு பயலுக. ஒவ்வொருத்தரும் அவங்களோட ஆழ்மனசுல போய் "நீ மிகப் பெரிய கவிஞன்னு" தங்கள தாங்களே நம்ப வெச்சிப்பாங்க போல. ஒரு பேட் மேல நாலு A4 பேப்பர வெச்சி, கைல ஒரு  மை பேனாவ வெச்சி மணிக்கணக்கா விட்டத்த பாக்குறானுங்க பாருங்க, நமக்கு இலக்கியத்து மேல இருக்குற ஆசையே போயிடும். 
சரி அவ்வளோ நேரம் யோசிக்கிறானே ஏதாவது தேறுமானு பாத்தா
"ஆதார் கார்டிலும் அழகி நீயடி, என் ரேஷன் கார்டில் உன் பேர் செக்கனும் நானடி"னு ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு வரில எழுதி, கவிதைனு சொல்லி கொல்லுறாங்க. இதுல மூணு புள்ளி ஒரு ஆச்சரிய குறி வேற.
 
சோப்பு சிற்பம்:
 
நாம குளிக்குறதுக்கு பயனடுத்தும் சோப்பை வைத்து, அத செதுக்கி, "ஏதோ ஒரு உருவத்த" வர வெச்சிட்டு, இது தான் டா சோப்பு சிற்பம்னு சொல்லுறாங்க. செதுக்குறத ஒழுங்க செய்யாம, ஏடாகுடமா வெட்டி எடுத்து, மழைக்கு அப்புறம் இருக்குற ரோடு மாதிரி ஒரு உருவத்த குடுக்குறாங்க. ஹார்ட்டீன செதுக்குறதா நெனச்சிட்டு அடிபட்ட உருளை கிழங்கு மாதிரி ஒரு உருவத்த செதுக்கி குடுக்குறது, தான் கொடூரம். அதுக்கெல்லாம் ஒரு படி மேல போய் கதலி ஓட முகத்தையே ஒருத்தன் செதுக்கி குடுக்க முயற்ச்சி செஞ்சு, அது ஒரு புல் டாக் மூஞ்சி மாதிரி வந்து, அவன் மூஞ்சிய பேத்துக்கிட்டது தான் டாப். 
 
 
எம்பிரய்டரி:

வராத விஷயத்த வம்படியா முயற்சி செஞ்சு அடி வாங்குறது நம்ம பசங்களுக்கு ரொம்ப பிடிச்சது போல, ஆளோட துப்பட்டாவ ஆட்டைய போட்டு அதுல எம்பிரய்டரிங்குற பேர்ல ஏதேதோ பண்ணி அந்த துப்பட்டவையே கிழிச்சு வெக்குறாங்க. "ஐ லவ் யூ" இத அந்த துணில ஒழுங்கா எழுதி முடிக்கிறதுக்குள்ள எப்படியும் அடுத்த காதலர் தின்மே வந்துவிடும். கொஞ்சம் வேகத்த கூட்டினா ஏதோ குழந்தை கிறுக்குன ஒரு படம் மாதிரி வருது. இதுலையும் ஏதேதோ டிசையின் போட முயற்ச்சிக்கும் ஆளுங்களும் இருகாங்க. வாழக்கா பஜ்ஜிய பொறிக்கத் தெரியாதவன் பொறிச்சு எடுத்தா மாதிரி இருக்கும் அந்த டிசையின்.
 
ஆபரணங்கள்:

இப்போலாம் பொண்ணுங்க தங்க நகைகள விட பேப்பர்ல அவங்களே பண்ணிக்குற ஃபேன்சி ஆபரணங்களா தான் அதிகமா போடுறாங்க. இத பசங்க பாத்து வெச்சிக்கிட்டு எப்படியாவது இந்த மாதிரி செய்யனும்னு முடிவெடுத்து ஒரு 3-4 மாசம் பயிற்சி எடுத்து பண்றாங்க. ஆனா ரிஸல்ட் என்னமோ ஃபனால் தான். ஒரு தோடு செய்யப் போய் அது சுத்தி உட்ட மேகி நூடுல்ஸ் மாதிரி மாறிப்போய் காதலியோட காதுகள பாடா படுத்துது. 
 
 
 
ஃபோடோ ஃபிரேம்:

காதலி கூட சுத்தும் போது எடுத்த செல்பீ, காதலிய அழக எடுத்த படங்கள ஒரு கொலாஜ் (கொல) செய்து. அத அவங்களே ஒரு பிரதி எடுத்து, அவங்க கைப்பட மர்த்துலையோ இரும்பு ராட்லையோ இல்ல பேப்பர்லையோ செஞ்ச பிரேம்கு உள்ள வெச்சி குடுக்குறது அப்பப்போ நடக்குற விஷயம். இதுல விசித்திரமா, காதலி ஓட படம் மறையிற மாதிரி அளவு தப்பி போகும், இல்ல கொடுக்கும் போது போட்டோ தனியா பிரேம் தனியா பறக்கும். பசை போட்டு ஒட்டும் போது அது படத்துல சின்ன மாற்றத்தை ஏற்படுத்தும். கடைசியில "அவ்ளோ தானானு" நம்மள பாக்கும் போது பகீர்னு இருக்கும்.
 
தலையணை:

செய்முறையை படிச்சு பாத்தா தலையணை செய்யுறது சுலபமா தான் தெரியும். செய்யும் போது தான் அதுல இருக்கிற வலி தெரியும். இதய வடிவத்துல தலையணை செய்ய இரண்டு துணி துண்டு எடுத்து வெட்டி, உள்ள பஞ்சு வெச்சி தெச்சா போதும், இது செய்முறை, ஆன செய்யும் போது, கத்தறிக்கோலால வெரல் வெட்டிகிறாது, ஊசியால குத்து வாங்குறாது, பஞ்சு மூக்குல ஏறி தும்முவது, இதெல்லாம் தவிர்க்க முடியாத காமெடி சீன்கள். மேலும் அத காதலி கிட்ட குடுக்கும் போது ஒரு தட்டு தட்டினா பஞ்சு பறந்து அவங்க மூக்குல ஏரும் சம்பவமும் நடக்கும்.
 
ஓவியம்:
 
இந்த ரவுசுக்கு கவிதையே மேல்னு தோன்ற வெக்குற ஒரு திறமை. மனசுல இருக்குறத அப்படியே வரையும் சிலர் இருந்தாலும், ஒரு பெரிய ஜனத்தொகை ஓவியத்துல சொதப்பதான் செய்யுது. என்னமோ பிகாஸோ, டா வின்சி மாதிரி மூஞ்சிய வெச்சிட்டு வரைவானுங்க. ஆனா ஆளோட மூஞ்சிய வரையச் சொன்னா ஏதோ பாகுபலி மாடு மாதிரி ஒரு உருவம் பேப்பர்ல இருக்கும். ஒரு சிலர் ஒழுங்க வரஞ்சிடுவாங்க, வண்ணம் தீட்டணும்னு ஆரம்பிச்சு "அறநிலையத் துறை"க்கு கீழ இருக்க கோயில் சுவர் மாதிரி கலர் குடுத்து விடுவானுங்க. 
 
வீடியோ:

காலம் போகும் வேகத்துக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஈடு கொடுக்கும் வகையில பலர், செல்பீ கேமராவுல "ஹேப்பி வேலண்டையின்ஸ் டே டர்லிங்க்"னு ஆரம்பிச்சு அவங்க கதைய பூரா பேசி அத குடுக்குறாங்க. சிலர் அட்வான்ஸா போயி, அவங்க நண்பர்கள் கிட்டலாம் கதலிக்கு வாழ்த்து சொல்லச் சொல்லி அத படம்பிடிச்சு குடுக்குறாங்க. இது நல்ல யோசனையா தெரிஞ்சாலும் அவங்க கதைய கேட்டா கடவுளுக்கே பொருக்காத அளவுக்கு பீட்டரும், அள்ளி விடும் பொய்களும் நிரம்ப இருக்கும். இவங்கள சிம்பிளா, "கஞ்ச பிசினாரி, சோம்பேறி லவ்வருக்கு ஒரு பரிசு வாங்க துப்பில்ல"னு லவ்வரோட பிரெண்டே துப்பிட்டு போவாங்க.
 
 
இப்படி சொந்தமா செய்யுறேன்னு கெளம்புற எல்லரும் ஒரு நிமிஷம் யோசிங்க. இத பண்ணலாமா, பண்ணப்படாதா, முடியுமா முடியாதா இதெல்லாத்தையும் ஆராஞ்சி பாத்து சொந்த திறமைல ஏதாவது பண்ணுங்க. இல்லையா, ஊர்ல இருக்க எல்லா கிப்ட் ஷாப்லையும் இப்போ வாலண்டையின் டே கிப்ட் தான் ஹாட். அதுல உங்க லவ்வருக்கு பிடிக்கும்னு நீங்க நினைக்குறத வாங்கி குடுங்க.
 
 
பா.அபிரக்ஷன்
மாணவப் பத்திரிக்கையாளர்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close