Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்டுக்கு லட்சம் எலிகளை ஒழிக்கும் கிட்டி தொழில்!

ன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த நவீனத்தை விஞ்சும் அளவிற்கு உள்ளது பழைமையான தொழில்நுட்ப முறையான கிட்டி(பொறி) தான்.

தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்தும், நெல் வயலில் தண்ணீரில் தத்தளிக்காமல் இருக்க  நெற்பயிரை மடித்து வைத்தும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏக்கருக்கு சுமார் 20 சதவீதம் சேதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், எலிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையில் பல வகையான விஷ மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  மேலும், வயல்களில் எலிகளை பிடித்து உணவாக்கிக் கொள்ளும் ஆந்தை உள்ளிட்ட பறவைகள் அமர்வதற்காக பறவைகள் இருக்கை அமைப்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

இருப்பினும், அவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு தமிழகத்தில் ஒரு சமூகத்தினரால் மூங்கில் குச்சிகளால் வடிவமைக்கப்பட்ட கிட்டிகளை (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை பிடித்து அழிக்கப்படுகின்றன. தற்போதுஅதற்தான சீசன் தொடங்கியுள்ளதால் கிட்டி முறையிலான எலி ஒழிப்பு முறையை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கிட்டி முறையில் எலி ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த  என்.ரவி கூறுகையில், ''அறிவொளி நகரில் சுமார் 30 குடும்பத்தினர் இந்த தொழிலையே பாரம்பரியமாக செஞ்சிட்டு வர்றோம். என்கிட்ட சுமார் 400 கிட்டிகள் உள்ளன. தேவையான கிட்டிகளை மூங்கில் குச்சிகளைக் கொண்டு நாங்களே  வடிவமைத்துக்கொள்வோம்.

ஏக்கருக்கு 300 கிட்டிகள் நட்டால் ஓரளவு எலிகளை பிடித்து அழித்து விடலாம். இதற்கு விவசாயிகளிடமிருந்து ஒரு கிட்டிக்கு 4 ரூபாய் வாடகையாக வாங்குகிறோம். வயலில் முதல்நாள் அரிசி உள்ளிட்ட தீவனம் இட்டு கிட்டிகளை ஊன்றிட்டு வீட்டுக்கு போயிடுவோம். மறுநாள் வந்து கிட்டிகளை எடுப்போம். ஆண்டுக்கு சம்பா மற்றும் கோடை காலத்தில மட்டும் எங்களுக்கு வேலை இருக்கும். என்னிடமுள்ள 400 கிட்டிகளைக்கொண்டு ஆண்டுக்கு சுமார் 6,000 எலிகளை பிடித்துவிடுவோம். அதேபோல, எங்கள் தெருவில் உள்ளோரிடமுள்ள சுமார் 10,000 கிட்டிகள் கொண்டு ஆண்டுக்கு சுமார் லட்சம் எலிகளை பிடித்து அழித்து வருகிறோம். இந்த முறையில் தமிழகமெங்கும் எலி பிடித்து ஒழிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லில் ஏற்படும் இழப்பு தடுக்கப்படுகிறது'' என்றார்.

மேலும், இது குறித்து வீரராகவபுரத்தைச் சேர்ந்த விவசாயி கே.கார்த்திகேயன் கூறுகையில், ''எலி மருந்துகளை வரப்போரங்களில் வைக்கலாம். ஆனால், நடவு செய்துள்ள இடங்களில் வைக்க முடியாது. அப்படி வைத்தாலும் முழுமையாக அழிக்க முடியவில்லை. வேறெந்த தொழில்நுட்பமும் அரசு எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கிட்டி முறையிலேயே எலிகளை அழித்து வருகிறோம்.

ஏக்கருக்கு 35 மூட்டைகள் விளையுமென்றால், அதில் 6 மூட்டை நெல் எலியால் வீணாகும். இதன் மூலம் ரூ. 5,500 இழப்பு ஏற்படும்.  இதுதவிர, வைக்கோலும் வீணாகும். ஆகையால், கிட்டிகள் முறையில் எலிகளை ஒழிப்பதற்கு ரூ. 1,200 மட்டுமே செலவாகுமென்பதால் இதை பயன்படுத்துகிறோம்'' என்றார்.

குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற பழங்கால முறையே சிறந்தது.

த.வினோதா
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ