Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் அமைதிக்காக நடந்த யாகம்; அட இது புதுசா இருக்கே!

வழக்கிற்காகவும், சொந்த பிரச்னைகளுக்காகவும் அரசியல்வாதிகள் யாகம் செய்வது தமிழகத்திற்கு புதியதல்ல. ஆனால் மதுரையை சேர்ந்த வரதராஜன் பொது நலத்திற்காக யாகம் செய்திருக்கிறார்.

 

மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். சமூக ஆர்வலரான இவர், வரும் சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற வேண்டும் என்பதற்காக திருப்பாலை கிராமத்தில் உள்ள நாகராணி திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினார். அதில், அந்த கிராம பகுதி மக்கள் அனைவரும் ஜாதி, மத பாகுபாடு இன்றி பங்கேற்றனர்.
 



இதைப் பற்றி வரதராஜனிடம் பேசினோம், "நாங்கள் எந்த கட்சியையும் அடையாளப்படுத்தி இந்த யாக சிறப்பு பூஜை நடத்தவில்லை. முழுக்க முழுக்க ஒரு பொதுவான நல்ல நோக்கத்திற்காகதான் நடத்துகிறோம். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் விழிப்புணர்வு ஏற்படும். ஓட்டிற்கு பணம் வாங்காமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அனைவரிடமும் ஏற்படும். மேலும் தேர்தல் நடக்கும்போது மற்றும் அதன் முடிவுகளை வெளியிடும்போதும் எந்த வித கூச்சல், குழப்பங்களும், வன்முறைகளும் நடைபெற கூடாது என்பதும் இந்த யாகத்தின் நோக்கம்.



டெங்கு காய்ச்சல் பரவியபோது சிறப்பு பூஜைகள் நடத்தினோம். கண்டிப்பாக தேர்தல் நல்லபடியாக நடந்து முடியும் என்று நம்புகிறோம்.


- சே.சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ