Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாய்லாந்தில் தட தடக்கிறது ராயல் என்ஃபீல்ட் !

ந்திய இரு சக்கர வாகனங்களின் ராஜாவாக கோலோச்சும்  ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்,  ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலும் சில்லரை வர்த்தகம் கொண்டுள்ளது. 2015-ம் ஆண்டு, உலகம் முழுவதும்  4,50,000 ராயல் என்ஃபீல்டுகள் விற்கப்பட்டன. நாளுக்கு நாள் மார்கெட்டில் இதற்கான கிராக்கி அதிகமாகிக் கொண்டே போக, 2018 ல் 9,00,000 வண்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

ஜெனரல் ஆட்டோ சப்ளை கோ.லிமிடெட் இதனை அமைக்க வழி வகுக்க, புதிய ராயல் என்ஃபீல்ட் ஷோ-ரூம், தாய்லாந்தின் தாங்க்லோர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது, இங்கு வரும் வாடிக்கையாளர்கள் புல்லட் 500 சி.சி, க்ளாசிக் 500 சி.சி, க்ளாசிக் க்ரோம், காண்டினெண்டல் ஜி.டி 535 சி.சி ஆகிய மாடல்களை வாங்க முடியும்.

3685 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஷோ-ரூமில், பைக்கர்ஸுக்கான அக்சசரிஸும், உடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் அணைத்து ராயல் என்ஃபீல்ட் ஷோ-ரூம்'களைப் போலவே அங்கும் "பைக்கர்ஸ் லிவிங் ரூம்" என்கிற தீமோடுதான் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவோடு, முக்கிய வாகனங்களின் விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் படி, புல்லட் 500, 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கும், காண்டினெண்ட்ல் ஜி.டி 4 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கப்பட்டுள்ளது.
               
எக்கனாமி டைம்ஸின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஜனவரி வரை ராயல் என்ஃபீல்டின் விற்பனை சதவிகிதம் 65 வரை உயர்ந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலக் கட்டத்தில் 47,710 வண்டிகள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டின் 28,927 உடன் ஒப்பிடும் பொது இது மிகவும் பாராட்டத்தக்க வளர்ச்சி என்றுள்ளது.

இது குறித்து ராயல் என்ஃபீல்டின் பிஸ்னஸ் ஹெட் , "இந்தியாவில் எங்கள் தரத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியே, தாய்லாந்திலும் இந்தோனேஷியாவிலும் எங்கள் முயற்சியைத் தொடங்க ஊக்குவிப்பாக இருந்தது. மித கன ரக (250-750 சி.சி) வண்டிகள் கொண்டுள்ள ஆற்றல், இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி, அனைவரையும் கவரும் என்பது எங்கள் நம்பிக்கை" என்று கூறினார். 

மு.சித்தார்த்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ