Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் பகிர்வு - வீடியோ

மிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து,  தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்தவர்

தங்க நிற உடல், கந்தர்வ குரல், ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர்,  தன் குரலால் ஒட்டுமொத்த மக்களையும் வசீகரித்தவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.

திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் நலம் கெட்டு,  மன நலம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி,  அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.

அவரது பிறந்த நாளான இன்று,  அவரது நினைவிடத்தில் அந்த ஊர் மக்கள் மரியாதை செலுத்தினர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவர்தான். அவருக்கு திருச்சியில் நினைவிடம் அமைந்துள்ளது.

வீடியோவை காண...

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close