Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த ஐஐடி மாணவன்!

ஆன்லைன்ல போன் வாங்கி பாத்திருப்பீங்க...கார் வாங்கி பாத்திருப்பீங்க ...ஏன் மதியம் சாப்பிட சாப்பாடு கூட வாங்கி பாத்திருப்பீங்க....ஐஐடி ஸ்டூடண்ட ஆன்லைன்ல வாங்கி பாத்திருக்கீங்களா? ஆனா அது உண்மை... கராக்பூர் ஐஐடி-யில் பெருங்கடல் பொறியியல் படிப்பை முடித்த மாணவன் ஆகாஷ் நீரஜ் மிட்டல்,  தன்னை தானே ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் 27,60,200 ரூபாய்க்கு லிஸ்ட் செய்துள்ளார்.



 

அவரது புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ள அவர்,  பொருளின் சிற‌ப்பம்சங்கள் என்ற பகுதியில் தனது கல்வி தகுதி, தனது சாதனைகள், தனது திறமைகளை முன் வைத்துள்ளார். ஃப்ளிப்கார்ட்டில் வேலைக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வுக்கு அழைப்பு வராததால் தன்னையே ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு முன் வைத்துள்ளார் இவர்.

இவர் எழுதிய It Wasn't Her Fault என்ற புத்தகமும்  ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது இவரை வாங்க பட்டியலிடப்பட்ட பக்கத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங்களும், நல்ல ரிவியூக்களும் கூட கிடைத்திருக்கின்றன. பின்னர் இவரை விற்கும் பக்கம் திரும்ப பெறப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ