Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்கள் ஒரு சமரச பேச்சாளராக திகழ சிறந்த 6 வழிகள்!

ந்நேரமும், எக்கணமும் நாம் அனைவரும் சமரசத்தை நோக்கியே நகர்கிறோம். தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஏதேனும் ஒரு கணத்தில் நாம் யாருடனாவது சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை வரும். அதற்கு நீங்கள் ஒரு பெண்ணோ, ஆணோ, இளமையானவரோ, முதுமையானவரோ நீங்கள் சரியானவரோ, தவறானவரோ என்பது ஒரு விசயமே இல்லை. ஆனால் நீங்கள் பேசும் வார்த்தை உங்களுடைய கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும். நாம் பேசும் வார்த்தைகள் பல்வேறு கோணங்களில் பல கருத்துக்களை உள்ளடக்கிய நோக்கில் அந்த சமரசத்தீர்வு  இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய எதிர்கால வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத மைல்கல்லாக இருக்கும்.

ஆனால் ஓர் ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்த உண்மை என்னவென்றால்,  பெண்களுக்கே பல சமயங்களில் இந்த பேச்சுவார்த்தை செயல்பாடு சவாலாக அமைகிறதாம். காரணம் ஒரே மாதிரியான பாலின வகையை உள்ளடக்கிய வளர்ப்பில் இருந்து விலகி இருப்பதே இதற்கு காரணம். அதே சமயம் ஆண்களை பொறுத்தமட்டில் அவர்களின் தலைமை குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பும், சலுகையும் எளிதில் கிடைப்பதாகவும், வெற்றி பெறுவதாகவும் தன்னுள்ளேயே உறுதி செய்துகொள்கின்றனர்.

 


சில தருணங்களில், சில பணியிடங்களில் வளர்ச்சி மற்றும் மாற்றம் பெற நிறைய காலங்கள் ஆகலாம். ஆனால் அவை பெண்ணால் நடந்ததாக எந்த ஒரு நிரூபணமும் இல்லை. 

மாறாக நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்றால்,  அதில் உள்ள தலைமை பதவி பல பெண்களை கவர முயற்சிக்கிறது என்றால் கீழே இடம்பெற்றுள்ள குறிப்புகள் நீங்கள் உங்கள் நிறுவனத்தை மேம்படுத்த உதவும்.

1. பொதுவான நிலையிலிருந்து மாறுபட்டு கேட்பது

ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை அமைய, பேச்சுவார்த்தையே முதல் படியாக அமையும். பெண் வேட்பாளர்கள் பொதுவாக தங்களின் சாத்தியமான கோரிக்கைகளை முன்வைக்க தயங்குகிறார்கள். குறிப்பிட்ட சூழ்நிலை மாற்றம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதை பெண்கள் அங்கீகரிக்கவேண்டும். ஏனெனில் மறைமுக எதிர்ப்பின் காரணமாக ஓர் ஒற்றை நடவடிக்கை,  ஒரு முழு நிறுவனத்தின் சமத்துவத்தையும் மாற்றவல்லது.

2. உங்கள் திறன் மற்றும் சக்தியை நினைவில் கொள்ளுங்கள்

ஒரு இரண்டு நிமிட மெனக்கிடல், பேச்சுவார்த்தையில்  உங்களின் செயல்திறனையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது என நிரூபித்துள்ளார் ஒரு ஹார்வர்டு ஆராய்ச்சியாளர் . உங்களின் விவாதம் துவங்கும் முன் தனித்து சென்று,  நேராக நின்று கைகளை நீட்டி,  இடுப்பிலோ அல்லது சக்தி பெருகும் நிலையிலோ வைத்து நேர்மறை எண்ணம் கொண்ட பாவத்துடன் இருங்கள். அது எண்டோர்பினை ஊக்கப்படுத்தி,  நம்பிக்கையையும் பதற்றமற்ற சூழ்நிலையை வழங்குகிறது. உங்களின் கருத்துக்களை நிறைவேறும் நோக்குடனும்,  நேர்மறை தோற்றத்தையும்,  பார்வையில் ஒர் கனிவையும் கொண்டு, கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மற்றவரிடம் பேசுங்கள். நீங்கள் உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்தால் அது கண நேரத்தில் கைகொடுக்கும்.

3. நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் சகஊழியர்களிடம் உங்கள் வெற்றியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்


பேச்சுவார்த்தை, நிறுவனம் மற்றும் சக ஊழியர்களின் மீது நல்ல  நல்ல தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடியதாக இருப்பின்,  பெண்களும் ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடுபவராக இருக்க வேண்டும் என்றும்,  அதில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் நினைப்பார்கள்.4. குழு பரிந்துரை :

அறிவியலாளர்களின் ஆய்வின் அடிப்படையில், பெண்கள் ஒரு பெரிய குழுவில் வாதாடும்போது தங்களை பற்றிய சிறப்பை உணர்கிறார்கள்.  மேலும் அவர்களை பற்றிய வளர்ப்பும் அடையாளமும் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

5. ஒருவரை சார்ந்து நடப்பது:

பெண்கள் எப்போதும் சமூகம் சார்ந்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவ்வாறே வளர்கிறார்கள். இருந்தாலும் கூட அவர்களின் கவனம் தன் சுற்றத்தார் நோக்கி இருக்கையில் சுயநலமற்றவர்களாக இருக்கிறார்கள்.


6.  உறுதியான நோக்கு:

பெண்கள் பல காரணங்களுக்காக தியாகங்கள் செய்கிறார்கள். அதிகப்படியான பொறுப்பு, இழப்பீடு காரணமாக சுறுசுறுப்பை தொடர இயலாமல் போகிறார்கள். போட்டி பேச்சுவார்த்தை, முன்மொழிய, மாற்ற, முன்னெடுக்க, முன்னேற, மேம்படுத்த என ஏதேனும் ஒன்றிற்காக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க நினைத்தால் வாழ்த்துக்கள். எனினும் கவனமாக இருங்கள். புன்னகை, விடாமுயற்சியை மறந்துவிடாதீர்கள்! 

-மு.ஜெயராஜ்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close