Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்! - லத்திகா சரண்

தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி லத்திகா சரண் ( ஓய்வு) எப்போதுமே கம்பீரம்தான். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அந்த கண்டிப்பும் கறாரும் இன்னும் அப்படியே உள்ளது. 

திருச்சியில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்த அவர் நமக்கு அளித்த பேட்டி இது...


1976 ல் I.P.S அதிகாரியாக பதவியை ஏற்றீர்கள், தமிழ்நாட்டுடைய முதல் பெண் டி.ஜி.பி நீங்கள், முதன் முதலில் போலீஸ் உடை அணியும்போது எப்படி உணர்ந்தீர்கள்... மற்றவர்களின் பார்வை எப்படி?

எனக்கு ஆண்களுக்கான உடையை அணிவது ஒன்றும் முதன்முறை அல்ல. எனக்கு பழகிய உடைதான். எனது பணிக்கான உடையை அணிவதில் எந்தவித தயக்கமும், சங்கடமும் இருந்தது இல்லை. மாறாக கூடுதல் தைரியமும், தன்னம்பிக்கையும்தான் ஏற்பட்டது. மற்றவர்களின் பார்வை கண்ணோட்டத்திற்காக நான் பயப்பட்டது கிடையாது.


பணியில் இருந்தபோது தங்கள் மனதை பாதித்த சம்பவம் ( அ ) பிரச்னைகள் எதாவது கூற முடியுமா ?

நான் சந்தித்த அனைத்து சம்பவங்களுமே பிரச்னையானவைதான். போலீஸ் துறையில் சம்பவங்களையோ பிரச்னைகளையோ சந்திக்கும்போதும், அவற்றை எதிர்கொள்ளும்போதும் ஒரு போலீஸாக எங்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல்தான் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் வரை,சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வரை பிரச்னையை எதிர்கொண்டு செயல்படுவோம்.

குடும்பத்தினரது ஒத்துழைப்பு தங்களுக்கு இருந்ததா? போலீஸ் துறை மீதான ஆர்வம் எப்படி?
                
எனது தாய், தந்தை நல்ல தரமான கல்வியை எனக்கு அளித்தார்கள். யாரும் " நீ இந்த துறையில் செல் ( அ) இதில் செல்லாதே என்று கூறியது கிடையாது. போலீஸ் வேலை கிடைத்த போது அத்துறை பற்றி எதுவும் பெரிதாக அந்தகாலத்தில் எனக்கு தெரியாது. ஆனால் க்ரைம் பற்றிய  புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன். UPSC தேர்வுகளை எழுதினேன். குடும்பத்தினரது ஒத்துழைப்பு மற்றும் கணவரின் ஒத்துழைப்பு  எனக்கு முழுமையாக கிடைத்தது .

நாட்டு மக்கள், சட்டம், அரசியல் - இவற்றில் எதில் மாற்றம் கொண்டுவந்தால் குற்றங்கள் குறையும்?     

மூன்றும் தனித்து செயல்படுவது கிடையாது, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. நாட்டு மக்கள் இல்லை எனில் எதுவுமே இல்லை. எதிலும் புதிதாக மாற்றம் கொண்டுவர வேண்டியதில்லை,
அவரவர்களுக்கான பணிகளையும், கடமைகளையும் முறையாக செய்தாலே போதும் .


சமூகத்தில் தெரிந்தே செய்யும் குற்றத்திற்கும், தெரியாமல் செய்யும் குற்றத்திற்கும் லத்திகா சரணாக தங்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்?


சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் எந்தவித ஒளிவு, மறைவும் இன்றி திருத்தமாக நிலைநாட்டுவேன்.

தற்போது அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எப்படி தடுப்பது?

பாலியல் வன்முறைகள் தற்போது மட்டும் நிகழவில்லை, தற்போது நடக்கும் தவறுகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. அதுவும் கூட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை அடுத்து இன்னொரு
பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே, இதை தடுக்க சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவே புரியவைக்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு பிரச்னையிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டு வெளிவருவது என்று புரிதல் உண்டாகும். ஒரு பெண்ணுக்கு வெளிஉலகம் கொடுப்பதை காட்டிலும் பிறந்த வீட்டிலேயே ஆரம்பம் முதல் மதிப்பினைக் கொடுத்து வந்தால் எல்லா நாட்களும் மகளிர் தினம் தான்.

ரா .நிரஞ்சனா
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close