Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிச்சைக்காரர்களின் மறுவாழ்விற்கான புதிய மசோதா!

இதுவரைக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டுமே பிச்சை எடுப்பது குற்றமெனவும், பிச்சை எடுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதும் இருந்து வந்த நிலையில்,  முதன் முறையாக பிச்சைக்காரர்களின் மறுவாழ்விற்காக ஒரு மசோதாவினை தயார் செய்துள்ளது மத்திய அரசு.

வறுமையில் இருக்கும் மனிதர்களுக்கான (கவனித்தல், பாதுகாத்தல் , மறுவாழ்வு) மசோதா 2015:

சமூகத்தின் எளிய மனிதர்களான பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளித்தல், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், பிச்சை எடுத்தலை ஒழித்தல், வீடுகளற்ற மக்களை காப்பாற்றுதல் அவர்களும் சமூகத்தில் நல்வாழ்க்கை வாழ வைத்தல் போன்றவற்றிற்காக இந்த மசோதாவினை மத்திய அரசு இயற்றியிருக்கிறது.

சிறப்பம்சம்கள்:

1. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வறுமை, நோயினால் பாதிக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இந்த மசோதாவினையும், அதனுடைய பயனையும் தெரிவித்தல்.

2. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு, தகுந்த மறுவாழ்வு அளிப்பதோடு, அவர்களின் திறமைகளை வெளியே கொண்டுவர, தனித்தனியாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல். பாதுக்காப்பான இடங்களில் மருத்துவர், சமூக ஆர்வலர், மனநல சிகிச்சையாளர் ஆகியோரின் கண்காணிப்பில் அவர்களை வைத்திருந்தல்.

3. பெண்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்காக தனித்தனியாக இடங்களை ஒதுக்கி அவர்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் அளித்தல்.

4. வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து பாதிக்கப்பட்ட மனநிலையில்  இருப்பவர்களுக்கு மனதளவில் ஒரு மாற்றத்தையும், ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அவர்களாலும் சமூகத்தில் நல்ல நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துதல்.

5. இந்த திட்டங்களை மாநிலம் முழுக்க சிறப்பாக நடப்பதை கவனிக்கவும், இதனை மேலும் சிறப்பாக நடத்துவதற்காக தனியாக ஒரு கண்காணிப்பாளரை நியமித்தல்.

7. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட சமூகத்துறை அலுவலரின் கீழ்  இத்தகைய திட்டங்கள் செயல்பட இருக்கின்றன. மாநில அளவில் இந்த திட்டத்திற்கு சமூக நலத்துறை இயக்குநர்தான் தலைவர்.

இத்தகைய அம்சங்களை கொண்ட இந்த மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- உ. சிவராமன்

எடிட்டர் சாய்ஸ்