Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியூஸ் கஃபே!

 ஓலா நிறுவனம்,  இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய 5000 கார்களை டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளது. டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை இருப்பதால் சிஎன்ஜி கார்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 5000 கார்களை அடுத்த ஆறு மாதங்களில் இயக்க உள்ளதால், அதற்காக ரூ.200 கோடி நிதி திரட்ட உள்ளது. டெல்லியில் டீசல் கார்களை இயக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவித்த பிறகு, டாக்ஸி நிறுவனங்கள் டீசல் கார்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என முறையீடு செய்தது. ஆப் மூலமாகவும் டாக்ஸி நிறுவனங்கள் மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு டீசல் கார்களை இயக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.


பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா. வடகொரியாவில் இருந்து ஜப்பான் வரை பாயும் திறன் கொண்டது இந்த ஏவுகணை



80% க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மற்றும் பெயின் கில்லர் என பரிந்துரைப்பது தடைசெய்யப்பட்ட மருந்துகளே என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. இதை 60% க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.



இ-கார்மஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஒ பின்னி பென்சலின் இ-மெயில் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் சி எஃப்ஒவின் மெயிலுக்கு 80 ஆயிரம் டாலர்களை டிரன்ஸ்பர் செய்ய வேண்டும் எனவும் மெயில் வந்துள்ளது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை நடத்தியதில் அந்த மெயில் போலியான முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. அந்த மெயில் ஹாங்காங், கனடா சர்வர்களை ரஷ்யாவில் இயக்கி உள்ளதாகவும், சைபர் க்ரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோன் ஆப் ஆர்க்கின் 600 வருடம் பழமை வாய்ந்த மோதிரம் மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது . இது பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் நான்கு லட்சம் டாலர்கள் கொடுத்து இங்கிலாந்து அரசால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது



கோல்டு பாண்ட் திட்டத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் ரூ.15,000 கோடி திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 9 சதவிகித அளவுக்குத்தான் பாண்டுகளை விற்பனை செய்ய முடிந்தது. அதன் மதிப்பு ரூ.1400 கோடியாகும். இதுவரை மொத்தம் மூன்று முறை பாண்டுகளை மத்திய அரசு விற்பனை செய்தது. 2015 நவம்பர் மாதத்தில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.246 கோடி அளவுக்கும், 2016 ஜனவரி மாதத்தில் ரூ.798 கோடிக்கும், மார்ச் மாதத்தில் ரூ.1050 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெறும் ரூ.400 கோடிக்கு மட்டும்தான் முதலீடுகள் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு 2.75 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள். தனிநபர் 2-500 கிராம் வரை வாங்க முடியும்.


கார்த்திக் சுப்புராஜ் அப்பா 'கபாலி"யில் ரஜினியுடன் நடித்து இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்பில் 'என்மகன் கார்த்திக் உங்களை மனசுலவச்சு ஒரு கதையை ரெடி பண்ணி இருக்கான். டைம் இருந்தா கேட்டு பாருங்க..." என்று ரஜினியிடம் சுப்புராஜ் சொல்லி இருக்கிறார். சில வாரத்துக்கு முன்பு செளர்ந்தயா மூலமாக ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து கதையைச் சொல்லி இருக்கிறார் கார்த்திக். அதன்பின் ரஜினியை பார்த்த சுப்புராஜிடம்,  கார்த்திக் கதையை பாராட்டி இருக்கிறார். அநேகமாக கார்த்திக் படத்தை '2.0' படப்பிடிப்பின் கேப்பில் கிடா வெட்டுவார் ரஜினி என்று சொல்கிறார்கள்.

 

முழங்கால் வலி காரணமாக உலக கோப்பை டி20 தொடரில் இருந்து இலங்கை அணியின் லசித் மலிங்கா விலகல்

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ