Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கஜகஸ்தானின் ஏஞ்செலினா ஜோலி !

ஜரினா ட்சொலேவா..கஜகஸ்தானை சேர்ந்த 22 வயதாகும் இந்த இளம்பெண்தான் இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் வைரல். கஜகஸ்தானின் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் ஜரினா. அந்நாட்டின் பத்திரிக்கைகளில்  இதற்காக இடம்பெற்ற ஜரினாவின் பெயர் தற்போது ஹாலிவுட் மீடியாக்கள் வரை பிரபலம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் இதுதான். ஜரினா அச்சு அசலாக அப்படியே நடிகை ஏஞ்செலினா ஜோலி போலவே இருப்பதுதான்.

திறமையால் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்றது இரண்டாவதாகவே பேசப்படுகிறது. மீடியாக்கள் அவர் ஏஞ்சலினா போல் இருப்பதைதான் இன்ட்ரோ கொடுத்து எழுதுகின்றன.

“இதுவரைக்கும் பார்த்ததில் ஏஞ்செலினா ஜோலி நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் நிச்சயமாக பொய் சொல்லவில்லை. உண்மையிலேயே ஜோலி மிகவும் அழகானவர். மொத்த உலகமும் ஜோலியின் நடை, உடை, பாவனைகளை பின்பற்ற ஆசைப்படுகிறது. நானும் அவரும் ஒரே மாதிரி இருப்பதாக நிறைய பேர் கூறுகிறார்கள்.

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏதாவது ஒருசில விஷயங்களில் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அப்படியே இருவரும் ஒரே மாதிரி இருக்கிறோம் என்பதை மறுக்கிறேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு விதங்களில் அழகாக இருக்கிறோம்” என முகத்தில் புன்னகையை படரவிடுகிறார் ஜரினா.

பாக்ஸிங்கில் ஜரினா செம கில்லி. “மற்றவர்கள் ஆண்டுமுழுவதும் கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவள், 5 நிமிடத்தில் கற்றுக்கொள்வாள். அந்தளவு திறமைசாலி. இன்னும் நிறைய ஜெயிப்பாள். ஜரினாவின் இப்போதைய ஒரே இலக்கு ரியோ ஒலிம்பிக்ஸ்தான்.” என்கிறார் ஜரினாவின் பயிற்சியாளர் அலெக்சாண்டர்.

-    ஞா.சுதாகர்

எடிட்டர் சாய்ஸ்