Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம்ம ரயில் நிஜமாவே சூப்பர் ஸ்பீட்தானா?

திமான் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் அதிவேக ரயில். இன்று முதல் தன் பயணத்தை துவக்கியிருக்கிறது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது இந்த கதிமான் ரயில். 184 கி.மீ தூரத்தை 100 நிமிடங்களில் கடந்து விடும். சதாப்தி விரைவு ரயிலின் வேகத்தைக் காட்டிலும் மணிக்கு 10-20 கி.மீ அதிகமாகும். சரி, இந்த ரயில், மற்ற நாடுகளின் அதிவேக ரயில்களோடு ஒப்பிடும் போது எந்த அளவுக்கு வேகமானது? இது நிஜமாகவே சூப்பர் ஸ்பீட் ட்ரெயின்தானா? உலக அளவில் ஓடுகிற மற்ற அதிவேக புல்லட் ட்ரெயின்கள் பற்றி தேடினால் 'நாம பரவாயில்லதான் பாஸ்' என்று தோன்றுகின்றன வந்து குவியும் தகவல்கள்.

மாக்லேவ் (ஜப்பான்) - சென்ற ஆண்டு மணிக்கு 600 கீ.மீ வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்த ட்ரெயின் இது. 11 செகண்டில் இரண்டு கிலோ மீட்டர் பாயக்கூடியது. இதே ரயில் டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு வெறும் 19 நிமிடத்தில் சென்றுவிடும்.

மாக்லேவ் (சீனா) - 2004 தொடங்கி இந்த ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது மணிக்கு 430 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் படி வடிவமைக்கப்பட்டது. இது சீனாவின் ஷாங்காயிலிருந்து ஓடுகிறது. இந்த ரயில் ஆக்ரா-டெல்லி தூரத்தை வெறும் அரைமணி நேரத்தில் கடந்துவிடும்!

ஹார்மனி CRH 389A (சீனா) - மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் இது. சீனாவின் ஷாங்காயிலிருந்து ஹான்ஜா வரைக்கும் ஓடுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 480 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடியது. இது ஆக்ரா - டெல்லி தூரத்தை 28 நிமிடத்தில் கடந்துவிடும் என்கிறார்கள்.

ஏ.ஜி.வி இடாலோ (இத்தாலி) - மணிக்கு 574 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்த இன்னொரு ரயில் இது. இத்தாலியின் நப்போலியில் கிளம்பி மிலானோ வரைக்கும் செல்கிறது. இந்த ரயிலும் டெல்லி டூ ஆக்ராவை இருபது நிமிடங்களில் கடந்துவிடும்!

வெலேரோ (ஸ்பெயின்) - மணிக்கு 400 கி.மீ வேகத்தில் பாயக்கூடியது இந்த ரயில். சராசரியாக இந்த ரயிலால் மணிக்கு 350 கி.மீ-ஐ எட்டமுடியும். பார்சிலோனா தொடங்கி மாட்ரிட் வரைக்கும் செல்லக்கூடியது இந்த ரயில். இது டெல்லி - ஆக்ரா தூரத்தை முப்பத்தைந்து நிமிடத்தில் கடக்கும்.

கிராண்டே விட்டேசே (பிரான்ஸ்) - இது மணிக்கு 574 கி.மீ வேகத்தில் பாயக்கூடிய உலகின் இரண்டாவது வேகமான ரயில். பாரீஸிலிருந்து அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வரக்கூடியது இந்த ரயில். இந்த ரயில் டெல்லி டூ ஆக்ராவிற்கு ஓடினால் வெறும் இருபது நிமிடங்களில் சென்றுவிடும்!

- வினோ

எடிட்டர் சாய்ஸ்

MUST READ