Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது பெண்கள் சம்மந்தமான பிரச்னை மட்டும் அல்ல!

 "இது பெண்கள் சம்மந்தமான பிரச்னை அல்ல. இது மனிதம் தொடர்பானது. அலட்சியம் செய்ய முடியாதது . இந்த முயற்சி பெண்களுக்கு தடையற்ற கல்வி பெற வழிவகுக்கும்" - டல்ஜித் சிங் சீமா, கல்வித்துறை அமைச்சர் பஞ்சாப்.

மாதவிடாய் காரணமாக பெண்களின் கல்வி பாதிக்கப்படும் அவலம் இன்றும் பஞ்சாபில் தொடர்ந்து வருகிறது. பெண் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பஞ்சாபில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.  'பள்ளி செல்லும் பெண்களுக்கான சுகாதார நாப்கின்கள் ' , எனும் புதிய லட்சியத் திட்டம்தான் அது. "சுவஸ்த்த கன்ய யோஜ்னா"வின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த இந்த முன்னெடுப்பின் மூலம், 6.83 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு  சுகாதார நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 6 முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வர வழிவகை செய்துள்ளது. மேலும் இதற்காகவென்றே 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபும் பெண் சுகாதாரமும்

பஞ்சாபை பொறுத்தவரை மாதவிடாய் குறித்தும் , அதனை கையாளும் முறைகள் குறித்தும் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . பள்ளிக்கு வரும் பெண்குழந்தைகள் , மாதவிடாயின் காரணமாக , மாதத்திற்கு 4-5 நாட்கள் பள்ளிக்கு வர இயலாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது.கிராமப்புற மக்களின்  நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கடைகளில் நாப்கின்களை வாங்க தயங்கும் பெண்களும் , நாப்கின் என்று ஒன்று இருப்பதே தெரியாத பெண்களும் வாழ்கின்றனர்.

பஞ்சாபின் கிராமப்புற மற்றும் சேரி பெண்களுக்கு சுகாதார நாப்கின்கள் தயாரித்து வழங்கி வரும் தன்னார்வலர்களான அனுஷ்--மீனாக்‌ஷி குப்தா தம்பதியினர்  கூறுகையில்,  "ஒருமுறை நாங்கள் சென்றிருந்த கிராமத்தில், இரு பெண்கள் மாதவிடாயின்போது தங்கள் உள்ளாடைகளை பகிர்ந்துகொண்டனர். நினைத்து பாருங்கள். ..அந்த பெண்களுக்கு உடுத்திக்கொள்ள உள்ளாடைகள் கூட இல்லாத நிலை. பஞ்சாப் அனைத்து விதங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மாதவிடாய் என்று வரும்போது, பின்தங்கிய நிலையே இருக்கிறது. அதுவும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், துணிகளையும், பேப்பர்களையும் பயன்படுத்துகின்றனர்."

இப்படி இருக்கும் ஒரு மாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த முன்முயற்சி முற்றிலும் பாராட்டத்தக்கது

தொடர்ந்து பேசிய மீனாக்‌ஷி , " நாப்கின்களை குளங்களின் அருகிலும் , குடிநீர் ஆதாரங்களின் அருகிலும் , வயல்வெளிகளிலும் எரிகின்றனர்.இது அவர்களின் தவறல்ல. அவர்களை பேச விடாமல் அடக்கி வைத்திருக்கிறோம். அரசு நாப்கின்கள் வழங்குகிறது என்றால், அதனை அப்புறப்படுத்தும் வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

மாற்றத்திற்கான விதை :

4--5 நாட்கள் தொடர்ந்து மாணவிகள் பள்ளி வராததை கவனித்த, அப்போதைய ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி பகத் , இந்த திட்டத்திற்கான முன்னெடுப்பை 2012-ல் விதைத்தார். ஃபரிட்கோட் என்ற இடத்தில் தயாரிப்பை தொடர்ந்தார் .தற்போது இதுபோன்ற இரண்டு யூனிட்கள் அமிர்தசரஸில் செயல்பட்டு வருகிறது.


 
இதுகுறித்து  ரவி பகத் கூறுகையில்,  "பெண்களுக்கு மாதவிடாயை பற்றி எடுத்துக் கூற யாருமில்லை. இந்த பிரச்னையால் மாணவிகளின் பள்ளி வருகை மிகவும் குறைந்திருந்தது. எனவே , இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் அடிப்படைத் தேவையான நாப்கின்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என நினைத்தேன். இதற்காக , லூதியானாவில் உள்ள பள்ளிகளில், நாப்கின்கள் தயாரிப்பிற்காக 38 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது " என்றார்.

இதற்கு முன்பு, பஞ்சாபின் இரண்டு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. படிப்பறிவு உள்ள வளமான மாநிலம் என்ற மாயை எல்லாம் இருந்தும், அரசின் இந்த முயற்சிகள் அனைத்தும் , தனிப்பட்ட அதிகாரிகளின் தன்னிச்சையான முயற்சிகளால் நீர்த்துப்போய் விட்டது .

ஆனால் , கடைசியாக பஞ்சாப் பெண்களுக்கு வெளிச்சம் வந்துவிட்டது.

-பா.நரேஷ்
(மாணவ பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close