Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நாள் நைட் தங்கணும்னா ரூ.10 லட்சம் வாடகை!

ம்மர் வந்தாச்சு. அடுத்து என்ன சுற்றுலாதானே... இவை இந்தியாவின் டாப் டென் ஹோட்டல் அறைகள். நிறைய காசிருந்தால் இதில் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது இங்கே தங்குகிற அளவுக்கு நிறைய உழைக்கலாம்!

1. டாடா சூட் - தாஜ்மகால் பேலஸ் - மும்பை - ஒரு இரவு தங்குவதற்கான வாடகை ரூ.10.5 லட்சம். வின்டேஜ் விஷயங்கள் கொண்ட பலவித காஸ்ட்லி பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் கொண்டது இது. இந்தியாவிலேயே காஸ்ட்லியான ஹோட்டல் ரூம் இதுதான்!

2. சுக்நிவாஸ் அன்ட் சூர்யவன்ஷி சூட்ஸ் - ராம்பாக் பேலஸ் ஜெய்ப்பூர் - ஒரு இரவுக்கு பத்து லட்ச ரூபாய். பளிங்கு கற்கள் பதித்த அறைகள் கொண்டது இது. பணக்கார வட இந்திய புதுமண தம்பதிகளின் ஹனிமூன் ஸ்பாட் இதுதான்.

3. மகாராணி அன்ட் மகாராஜா சூட் - உமாய்த் பவான் பேலஸ் - ஜோத்பூர் - ஒரு இரவு தங்குவதற்கு 8.8 லட்சம். ஜோத்பூர் மகாராணிக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக அறை இது. எலிசபெத் ராணி தங்கிய அறை என்பதால்தான் அவ்வளவு காஸ்ட்லி.

4. கோஹினூர் சூட் - தி ஓபராய் அமர்விலாஸ் - ஆக்ரா - ஒரு இரவு தங்குவதற்கு 7.5 லட்ச ரூபாய். தாஜ்மகாலுக்கு விசிட் அடிக்கிற பணக்கார பயணிகளின் சாய்ஸ் இதுதான். பால்கனியில் அமர்ந்துகொண்டு ரொமான்டிக்காக தாஜ்மகாலை ரசிக்க முடியும்!

5. நிஜாம் சூட் - தாஜ் ஃபலாக்னுமா பேலஸ் - ஹைதராபாத் - ரூ.7.5 லட்சம் ஒரு இரவு தங்குவதற்கு. ஹைதரபாத் நிஜாம் முன்பு தங்கியிருந்த அரண்மனை இது! அதுதான் இப்போது ஹோட்டலாக இயங்கி வருகிறது.

6. மகாராஜா சூட் - லீலா பேலஸ் - உதய்பூர் - 6.4 லட்ச ரூபாய் ஒரு இரவு தங்குவதற்கு. இந்த லேக் வியூ அறையின் அளவு 3552 சதுர அடி! கடைசியாக இங்கே தங்கிய உலக பிரபலம் ஜெனிபர் லோபஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

7. பிரஷிடென்ஷியல் சூட் - லீலாபேலஸ் நியூ டெல்லி - 5.5 லட்ச ரூபாய் ஒரு இரவு தங்குவதற்கு. இந்த அறையில் தங்கினால் உங்களுக்கு காம்ப்ளிமென்ட்ரியாக ஏர்போர்ட்டிலிருந்து பி.எம்.டபிள்யூ காரில் அழைத்து வருவார்கள். இந்த அறையும், காரும் புல்லட் ப்ரூஃப் வசதி கொண்டது.

8. மராத்தா பிரஷிடென்ஷியல் வில்லா - ஐ.டி.சி கிராண்ட் பாரத் - குர்கான் - ஒரு இரவுக்கு ஐந்து லட்சம் ரூபாய். 532 சதுர அடி அளவுள்ளது.

9. கிராண்ட் பிரஷிடென்ஷியல் சூட் - ஐ.டி.சி மவுரியா - நியூ டெல்லி - ஒரு இரவுக்கு ஐந்து லட்சம் ரூபாய். பராக் ஓபமாவும், விளாடிமிர் புடீனும் தங்கிய ஹோட்டல்.

10. பிரஷிடென்ஷியல் ஷூட் - செயின்ட் ரெஜிஸ் மும்பை - ஒரு இரவுக்கு நாலரை லட்சம் ரூபாய். மூவாயிரம் சதுர அடி அளவுள்ள மிகப்பெரிய அறை இது.

- வினோ

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close