Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க ரெடியா? வெறும் நூறு ரூபாயில் இந்தியாவையே சுற்றலாம்!

நாம் அவசரத்துக்கு லிஃப்ட் கேட்டு எங்காவது செல்வோம். ஆனா அஞ்சு கௌரானா, லஸந்த் மற்றும் ஆகாஷ் அப்படிபட்டவங்க இல்லை, ரொம்ப வித்தியாசமானவங்க. என்னன்னு பார்ப்போமா?

டூர் போவது என்றாலே எல்லா ஏற்பாடுகளும் செய்து டிக்கெட் எடுத்து தங்க, சாப்பிடன்னு எத்தனையோ செலவு இருக்கு... பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்கு ஏற்றபடி டூர் பட்ஜெட் இருக்கும். ஆனால், ஒரு பைசா கூட செலவு செய்யாமல் எவ்வளவு தூரம் சுற்றி வரலாம் என்று யோசித்தார்கள். உடனே கிளம்பி விட்டார்கள். சரி இது சாத்தியமா? எப்படி முடியும்? எனக் கேட்டால் முடியும் ''பாஸ் நம்ம மக்கள் அவ்வளவு அன்பானவர்கள்ங்க'' என்கிறார்கள் சிரித்துக்கொண்டே...

ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பயணிக்க வேண்டும் என்கிற இவர்களது குறும்புத்தனமான ஐடியாவினால்... மும்பையில் கிளம்பிய இவர்களது பயணம் எந்த வாகனம் கிடைத்தாலும் அதில் லிஃப்ட் கேட்டு தொடர்ந்தது. கையில் மொத்தம் நூறு ரூபாயுடன் குர்காவில் கிளம்பிய இவர்களது பயணம் ஜெய்ப்பூரில் முடிந்தது. ஆங்காங்கே கெஞ்சிக் கேட்டாவது இவர்களது பயணம் தொடர்ந்தது. இவர்களது பசிக்கு வழியில் வரும் கல்யாணமண்டபங்களில், ஊர் விழாக்களில் உணவுப் பிரச்னையைத் தீர்த்துகொண்டார்கள். சில நேரங்களில் உணவு இல்லை என்றாலும் அல்லது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவுதான் என்றாலும் இவர்களுக்கு ஓகேதான்.

ஏற்றிக் கொள்ளும் வாகனங்களில் பயணம்... கிடைத்த இடத்தில் உணவு என மும்பையில் தொடங்கிய இவர்களது தொடங்கிய இவர்களது பயணம் முழுவதுமே டிரைவர்களின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமானது. இவர்களின் கதையை மக்களிடம் சொல்லி அவர்களிடம் உணவு பெற்று அவர்களுடன் தங்கி அவர்களுடன் பேசிப் பழகி இப்படியே அவர்களது பயணம் தொடர்ந்தது. அடுத்தது புனேவை நோக்கி பயணம் தொடங்கினார்கள்.

பின்னர் புனேவிலிருந்து கிளம்பி வழி நெடுக லிஃப்ட் கேட்டே கோவாவை அடைந்தார்கள். அங்கு சாலையில் டென்ட் போட்டு தங்கி இருந்த வெளிநாட்டு பயணிகளுடன் தங்குவது, அவர்களுடனே சாப்பிடுவது என சில நாட்களைக் கழித்து இருக்கிறார்கள்.

அடுத்து அருமையாக சென்றது பெங்களூரு. சற்றே நீண்ட நெடிய பயணமாக அமைந்தது இது. நிறைய வண்டிகளும்தான். இந்த முறை இவர்கள் புதுமையாக உதவிக்கு ஆள்பிடித்தார்கள். இவர்களுடைய பயணக் கதையை சமூக ஊடகத்தில் வெளியிட்டு,  இவர்களுடைய அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால்... அதற்கு ஈடாகக் கொடுக்க வேண்டிய விலை அருமையான உணவும் தங்குமிடம் மட்டுமே என்று அறிவித்தனர். இப்படி இவர்களைச் சந்திக்க,  சமூக வலைதளங்களின் மூலம் விருப்பம் தெரிவித்தவர்கள் 300-க்கும் மேல். பெங்களூரிலேயே தங்கிப் பேசி, தங்கள் கதையைச் சொல்லி, சாப்பிட்டு டேரா போட்டது 25 நாட்கள். அத்தனை ஆர்வம் மக்களுக்கு. இவர்களது பயணத்தைப் பற்றி கேள்விப்பட்டு,  ஒரு பள்ளியில் செமினார் நடத்தச் சொல்லியும் இருக்கிறார்கள்.

அடுத்து அகமதாபாத்தில் நடைபெற்ற கார்பா திருவிழாவுக்காக, பெங்களூரில் இருந்து ஐந்து இரவுகளாக 1900 கி.மீ பயணித்தனர்.  இப்படி இவர்கள் ஓசியிலேயே லிஃப்ட கேட்டு பயணித்தது 5,700 கிலோ மீட்டருக்கும் மேல்...

'எப்படி பாஸ் இது சாத்தியமாச்சு..?' எனக் கேட்டால், '' எந்த ஒரு திட்டமிடலோ, இலக்கோ இல்லாத பயணம்... பயணம்... பயணம்... இந்த ஒரே வார்த்தைதான் எங்களை இதை சாதிக்க வைத்தது '' என்கிறார்கள் இந்த அற்புதமான இளைஞர்கள்!

கே. கணேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ