Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 100 - 500 க்குள் ஓர் அசத்தலான குடும்ப சுற்றுலா!

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் சென்னைவாசிகளின் கட்டணமில்லா கோல்டன் பீச், மெரீனா கடற்கரைதான். கடற்கரை மணற்பரப்பில் காலாற நடந்தபடி,  மலரும் நினைவுகளை புரட்டிப் போடும் சென்னை நண்பர்களுக்கு மெரீனாதான் அழகான, செலவில்லாத ஒரு இடம்.

அரசுப்பேருந்தில் ஏறி குடும்பத்தோடு பயணித்தால், அதிகபட்சமாக போக வர ஐம்பது ரூபாய் கையில் இருந்தால் போதும். சென்னையின் மறுமுனையில் இருந்து வருகிற நிலை என்றால், ப்ளஸ் 50 ரூபாய் கூடுதல் செலவு அவ்வளவுதான். ஒரு நாளின் மாலைப் பொழுதைக் கழித்து விடலாம்.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களாக பெரும்பாலும் கடற்கரைகள்தான் உள்ளன. அந்த வகையில், வங்காள விரிகுடாவை தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை மெரீனா கடற்கரைதான் உலகின் மிக அழகான நீண்ட கடற்கரையாக இருக்கிறது.

கடற்கரையோர மணற்பரப்பில் சின்னச் சின்ன ராட்டினங்கள், ராட்டினம் ஏறி ஐந்து சுற்று சுற்றி விளையாட நபர் ஒன்றுக்கு 25 ரூபாய். பூமராங் தட்டைகள் தலா ஒன்று 25 ரூபாய்.  விளையாட்டுத் துப்பாக்கிக்கு காத்திருக்கும் பலூனை சுட்டுத்தள்ள 20 ரூபாய் கட்டணம்.

அதேபோல், சுட்டு விற்கப்படும் கடல் மீன்கள் 30 ரூபாய் முதல் அளவைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். கொண்டைக் கடலை, சுண்டல்கள் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது, பஞ்சு மிட்டாய்கள், வாட்ச் மிட்டாய்கள் இரண்டுமே விலை 20 ரூபாய்தான். ஆக, பேருந்து பயணக் கட்டணம் இல்லாமல் நூறு ரூபாய் அடக்க விலையில் ஒரு நாள் மாலைப் பொழுதை பிள்ளைகளோடு மெரீனாவில் கழித்து விடலாம்.

மெரீனா கடற்கரை கொஞ்சம் ஓப்பனாக இருக்கிறதே என்று கவலைப்படும் இளசுகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் மெரீனாவிற்கு மிக அருகில் இருக்கும் பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் அமைந்திருக்கிறது. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இது அமைந்துள்ளதால், அடித்தட்டு மக்களை இது அவ்வளவாக கவரவில்லை எனலாம்.

இங்கே மெரீனாவின் சுண்டல், ராட்டினம் உள்ளிட்ட அம்சங்கள் இங்கே மிஸ்சிங் ஆகியிருப்பதைக் காணமுடியும். ஒரு பக்கம் உள்ளூர் மீனவ மக்கள் இங்கே வசித்தாலும், மறுபக்கம் வி.ஐ.பி.களின் குடியிருப்புகள் இங்கு இருப்பதால் எலியட்ஸ் பீச் தன்னுடைய வித்தியாசத்தை மாற்றிக் காட்டுவதை இங்கே காணலாம்.

200 ரூபாய் பயணச் சுற்றுலா

மெரீனாவிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கோவளம் கடற்கரை. இங்குள்ள கோவளம் தர்கா உலகப் புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று என்பதால், பல மாநில மக்கள் மட்டுமல்லாது, பல உலக நாடுகளில் இருந்தும் இங்கே விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வந்து விடுகிறார்கள்.

அவர்கள் தங்கிச் செல்ல, குறைந்த நாள் வாடகையாக ரூ. 300 முதல் சொகுசுக்கேற்றளவில் தங்கும் விடுதிகள் இங்கே கிடைக்கின்றன. பிள்ளைகளோடு வந்து சுற்றுலா போல அனுபவித்துச் செல்லும் சென்னை வாசிகளுக்கு 200 ரூபாயே போதுமானது.

மெரீனாவைப் போன்றே அத்தனை பொழுது போக்கு விஷயங்களோடு,  அப்போதே பிடித்து சமைத்துக் கொடுக்கும் கடலுணவுகளும் இங்கே சாதாரணமாகக் கிடைக்கிறது. விலையும் பயமுறுத்தும் அளவில் இருப்பதில்லை.

சென்னையின் எந்த முனையிலிருந்தும் ஒரு மணி நேரத்தில் வந்து விடக் கூடிய அளவில் பேரூந்து வசதிகள் கோவளத்துக்கு உண்டு என்பதை வைத்தே, அங்கு வருகிறவர்களின் எண்ணிக்கையை நாம் உணரமுடியும். உயரமான பனை, தென்னை, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் கண்கொள்ளாக் காட்சிகளாக மிக நெருக்கத்தில் இங்கு வளர்ந்து நிற்பது ரசிக்கத்தக்க ஒன்று எனலாம்.

500 ரூபாயில் சுற்றுலா போய்வர...

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து சரியாக 63-வது கிலோ மீட்டரில் வருகிறது மாமல்லபுரம். பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தை, சிற்பக் கூடங்களை இங்கே கடற்கரையோடு ஒட்டி ரசிக்கலாம் என்பதே மாமல்லபுரத்தின் சிறப்பு.

அதேபோன்று கடற்கரை பூமியாகவும் சுற்றுலாவுக்கு அதிக அளவில் உள்ளூரை விட வெளிநாட்டுப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் மாமல்லபுரம் திகழ்கிறது.

சென்னைக்குள் எங்கும் விருப்பம் போல் பயணம் செய்ய, அரசு பேருந்துகளில் வழங்கப்படும் 50 ரூபாய் விலை டிக்கெட்டை வாங்கிக் கொண்டு காலையில் பயணித்தால்,  அன்றிரவு வரையில் அதே பயண டிக்கெட்டை பயன்படுத்தி வீடு திரும்பலாம்.

ஐந்து பேர் கொண்ட குடும்பம்,  மாமல்லபுரத்துக்கு புளியோதரை அல்லது கட்டுச் சோற்றுடன் பயணப்பட்டால் ஐநூறு ரூபாயே அதிகம்தான். செலவிட பணம் கையில் இருக்கிறது என்கிறவர்கள், இதில் சொல்லியிருப்பதை படித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெறுமனே தகவலை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் படித்து வைத்துக் கொள்ளலாம்.

-ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ