Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டின்கோயிசம்... மதங்களை அங்கதம் செய்யும் புது மதம்!

மக்கு சினிமாவில் இருக்கும் அபத்தங்களை கிண்டல் செய்யும் உலக  'Spoff' சினிமாக்கள் தெரியும். ஏன் தமிழில் கூட அப்படி ஒரு படம் வந்திருக்கிறது (‘தமிழ் படம்’). அது போல், சமூகத்தில், அரசியலில் இருக்கும் பல அபத்தங்களை கிண்டல் செய்து பல கட்டுரைகள், சினிமாக்கள் வந்திருக்கிறது. இந்த கிண்டல்கள் நவீனமாகி இப்போது, ‘மீம்ஸ்’கள் வரை வந்து நிற்கிறது. இத்தனை நாள் இந்த கிண்டல்களிலிருந்து தப்பி வந்த மதங்களையும் கிண்டல் செய்ய கேரள இளைஞர்கள் புது வழியை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதன் பெயர்தான் ‘டின்கோயிசம்’.

மதங்களை நேரடியாக கிண்டல் செய்யாமல், ‘டின்கோயிசம்’ என்னும் புது மதத்தை ஏற்படுத்தி அபத்தங்களான சில காரியங்கள் செய்வதன் மூலம், மற்ற மதங்களில் இருக்கும் அபத்தங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.


உலகை ரட்சிக்க வந்த டின்கோயிசம்:

டின்கன் என்பது மிக்கி மெளஸ், ஸ்கூபி போல கேரளாவில் எண்பதுகளில் வடிவமைக்கப்பட்ட   ஒரு கார்ட்டூன் கேரக்டர்.  தொண்ணூறுகளின் துவக்கத்தில் மலையாள இதழான பாலமங்கலம் இதழில் பிரசுரமாகிய இந்த டின்கன் கேரக்டர், குழந்தைகளிடம் மிகப் பிரபலம்.
அப்போது குழந்தையாக இருந்து டின்கனை ரசித்தவர்கள் இப்போது இளைஞர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். அதில் சில இளைஞர்கள், இருக்கின்ற மதங்களின் சில நடைமுறைகளால் கோபமுற்று, அதைச் சுட்டிக்காட்ட டின்கனை பயன்படுத்தி, அவர் பெயரில் ஒரு புது மதத்தை ஏற்படுத்துகிறார்கள். அதுதான் டின்கோயிசம்.  இந்த மதம் உருவானதே சமூக ஊடகங்களில்தான்.


 டின்கோவின் உருவம் எலி வடிவில் இருக்கும். டின்கோவின் நெருங்கிய நண்பர் முயல். டின்கோயிஸ்டுகள் தங்கள் கடவுளான டின்கனின் பெயரை யாரும் உச்சரிப்பதை கூட அவர்கள் விரும்புவதில்லை. ஆம். மலையாள நடிகர் திலீப்,  தன் அடுத்த படத்திற்கு Professor Dinken என பெயர் வைத்துவிட்டார். உடனடியாக டின்கோயிஸ்டுகள் கோபமடைந்து திலீப் வீட்டை முற்றுகையிட்டுவிட்டார்கள். எப்படி எங்கள் கடவுளின் பெயரை ஒரு சினிமாவிற்கு வைக்கலாம் என்று கொந்தளித்துவிட்டார்கள். ‘அல் டின்கோய்ஸ்ட் ஸ்டேட் டெரரிஸ்ட் ’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, 'எங்கள் கடவுள் பெயரில் நீங்கள் படம் தயாரிப்பீர்களானால், உங்களுக்கு எதிராகப் போர் புரிவோம்' என்று போர் பிரகடனமே திலீப்பிற்கு எதிராக அறிவித்துவிட்டார்கள்.

இது என்ன சுத்த முட்டாள் தனமாக இருக்கு என்று அவர்களைக் கேட்பீர்களானால், அவர்கள் சொல்லும் பதில், 'இதைத்தான் மற்ற மதத்துக்காரர்கள் செய்கிறார்கள். அப்போதெல்லாம் கேள்வி எழுப்பாமல், எங்களை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.. நாங்கள் நிறுத்துகிறோம்' என்கிறார்கள்.

கடல் தாண்டி பரவும் டின்கோயிசம்!

டின்கோயிசம் கடல் தாண்டி பரவி வருகிறது. அமெரிக்காவில் கூட இதற்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.  கேரளாவில் இருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் எல்லாம் இந்த மதத்திற்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். அண்மையில் கோழிக்கோட்டில் இந்த மதத்தை சார்ந்தவர்கள் ஒன்று கூடி,  மிகப் பெரிய மாநாடு நடத்தி இருக்கிறார்கள்.  டின்கோவிற்கு என்று தனி வழிப்பாட்டு பாடலும், வழிப்பாட்டு முறையும் இருக்கிறது. அவர்களது புனித நூல் டின்கன் அறிமுகமாகிய பாலமங்கலம் இதழ்.

ஆம். கிண்டல் செய்வதையே பயங்கர சீரியஸாக செய்கிறார்கள்! 

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ