Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெயிலும், காடும் பின்னே... மனிதனும் #WhereIsMyGreenWorld

பிரபஞ்சத்தையே வெல்லப் போகிறேன் என்று புறப்படும் மனிதன், இறுதியில் தேடிக் கொள்வது என்னவோ  மோசமான அழிவுதான். தான் வாழும் உலகை மட்டுமின்றி, தன்னோடு உயிரை பகிர்ந்து கொள்பவற்றையும் ஒழித்து விடுகிறான். இயற்கையின் படைப்புகள் தனக்கு மட்டுமே உரியவை என்னும் இருமாப்புதான் இதற்கு காரணம். பாவம், தேனீக்கள் அழிவில்தான் மொத்த உலகத்தின் அழிவும் இருக்கிறது என்பதை மறந்து விட்டான்.


ரா. ராஜசேகர் தமிழகத்தின் மிக முக்கியமான சூழலியல் புகைப்படகலைஞர். இந்தியாவின் அனைத்து காடுகளுக்கும் பயணித்து வருபவர். மனிதனின்  பேராசை எப்படி காடுகளை சிதைத்து வருகிறது என்று ஆதங்கப்படுபவர்.

அவர் சொல்கிறார், “காடுகள் பழங்குடிகளின் கைகளில் இருந்த போது, காடு காடாக இருந்தது. எப்போது காடுகள் அரசின் கைகளில் போனதோ அப்போதே நிறுவனங்களில் வேட்டை காடாக மாறிவிட்டது” என்று.

மேலும் அவர், “காடுகள் மீது நாம் தொடுத்த யுத்தத்தின் விளைவுகள்தான் இந்த கடும் வெயிலும், தண்ணீர் பஞ்சமும். ஆனால், துரதிஷ்டவசமாக நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. சூழலியலுக்கு எந்த கேடும் விளைவிக்காத உயிரினங்களும் மோசமாக பாதிக்கபடுகிறது” என்று வருந்துகிறார்.

“மனிதன் மட்டும் இந்த புவியில் தனியாக வாழமுடியாது. இது அனைவருக்குமானது. அதை புரிந்து கொள்ள தவறுவான் என்றால் விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். கண்ணாடி கூண்டுக்குள் நின்று கல் எரிந்து கொண்டிருக்கிறான் மனிதன். அதன் கூர்மையான் சில்லுகள் குத்தி வலியோடு இறக்க நேரிடும்...” என எச்சரிகிறார் ராஜசேகர்.

ராஜசேகர், தடோபா - அந்தாரி, பந்திப்பூர் மற்றும் கிர் காடுகளில் எடுத்த படங்களை காண கீழே உள்ள படத்தில் க்ளிக் செய்க..



- மு.நியாஸ் அகமது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close