Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 மணி நேரத்தில் ஹிந்தி கற்றுக்கொள்வது இப்படிதான்! (வீடியோ விளக்கம்)

'20 மணி நேரத்தில் ஹிந்தி கற்க முடியும்...!- மதுரை வாத்தியார் சொல்லும் 'மேஜிக்' என்ற தலைப்பில், கடந்த 25 ம் தேதி அன்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

மதுரை, சிம்மக்கல் பகுதியில் உள்ள விஸ்வநாதன் தம்பியண்ணா என்ற ஆசிரியர் இதை சொல்லிக்கொடுப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த செய்தி அதிக அளவு வாசகர்களால் படிக்கப்பட்டபோதிலும், பல வாசகர்கள் 'அது எப்படி சாத்தியம்... முடியுமா?' என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தனர்.

வாசகர்களின் இந்த சந்தேகத்தை அவரிடமே முன்வைத்தோம். இதனையடுத்து ' 20 மணி நேரத்தில் ஹிந்தி கற்க முடியும்...!' என்பது இப்படிதான் என விளக்கம் அளித்தார்.

" இருபது மணிநேரத்தில் ஹிந்தி மொழியை எழுதப்படிக்க கற்றுக்கொள்ளமுடியுமா? என்று ஐயப்படதேவையில்லை. என்ன... ஏன்... எப்பொழுது...எங்கே....எப்படி... எத்தனை... யார்? என்கிற இந்த 7 கேள்விகளை கேட்டு அதற்கு பதில் சொல்ல கற்றுக்கொண்டாலே போதும் எளிதில் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள முடியும்.

எந்த மொழியையும் முதலில் பேசிப்பழக வேண்டும். பிறகு எளிதாக எழுத, படிக்க பழகிக்கொள்ளமுடியும். தமிழை அப்படித்தானே கற்றோம். 75 சதவிகிதம் தமிழ், 25 சதவிகிதம் ஆங்கிலம் என்கிற புது ஸ்ட்ரக்சரில்தான் இந்த மொழி உள்ளது.

ஹிந்தி மொழி நான்கு விதமான உச்சரிப்புகளை கொண்டதாயிற்றே... எப்படி கற்றுக்கொள்ள முடியும் என கேட்கிறார்கள்.


Parvathi, Pharmacy, Babu போன்ற வார்த்தைகளில் உள்ள உச்சரிப்பின் வித்தியாசத்தின் மூலமாகவே, அதனையும்...." என விளக்கும் விஸ்வநாதன் தம்பியண்ணா.

தொடர்புக்கு: தம்பியண்ணா, சிம்மக்கல், மதுரை, செல்.9994866277

எடிட்டர் சாய்ஸ்

MUST READ