Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் ரோல்மாடல் எங்க அப்பா தான்!

தெறி படத்துல விஜய் யூஸ் பண்ண டி-ஷர்ட், விராட் கோலி ஹேர் ஸ்டைல் இதெல்லாம் ஏதோ ஒரு இன்ஸ்ஃபயர் ஆகி பண்ணது. ஆனா எல்லாருமே ஒருத்தரோட இன்ஸ்பரேஷன்ல அவர ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்.  மீசை எப்படி வைக்கணும், வேஷ்டி கட்டுனா எவ்ளோ கம்பீரமா நடக்கணும், ஒருத்தர் கண்ண பாத்து எவ்ளோ கெத்தா பேசணும் இதெல்லாம் அவரோட  இன்ஸ்பரேஷன் தான். எல்லாருக்குமே இது அவங்க அப்பாவா தான் இருக்கும்.

இவுங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.  ஃபேஸ்புக் பேருக்கு பின்னாடி உள்ள அவங்களோட  பேரு, அதுக்கு பின்னாடி உள்ள நம்மளோட டிகிரி, இப்படி பின்னாடி உள்ள எல்லா விஷயத்துலயும் அவங்க இருப்பாங்க.நம்மள முன்னாடி இருக்கணும்னு சொல்லிட்டு பின்னாடி நின்னு கைதட்டுற க்ளாஸிக் அப்பாக்கள். 

எல்லா வீட்டுலயும் தான் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க. ஏன்னா அப்பானா ரொம்ப பயம். ஸ்கூல் படிக்கும் போது ரேங்க் கார்டுல கையெழுத்து வாங்க நீட்டும் போது  நல்ல மார்க் வாங்கி இருந்தாலும் ஏன்டா இந்த தடவ மார்க் குறைஞ்சிருக்குனு கேட்கும் போது ஒரு வித பயத்தோட தான் எல்லாருக்கும் பதில் வரும். ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகும் போது வீடு, ஸ்கூல்னு இருந்த சூழல்ல இருந்து வெளி உலகத்துக்கு எப்படி என்ன தயார் படுத்திக்கணும்னு சொல்லி கொடுக்கறது அப்பா தான்.  நா நினைக்குற வேலைக்கு தான் போவேன்னு திமிரா பசங்க பேசும்போதெல்லாம் எல்லாம் என்ன வேணும்னாலும் பண்ணு அப்படினு சொல்லிட்டு வெளில போய் என் பையன் அவனுக்கு புடிச்ச வேலை பாக்குறான்னு சொல்லி பெருமைப்படுற 7ஜி ரெயின்போ காலணி டைப் அப்பாக்கள் நிறைய பேர் .

அப்பாக்களுக்கும், மகன்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனா கடைசில மகன்கள் தான் ஜெயிப்பாங்க‌...ஸாரி அப்பாக்கள் ஜெயிக்க வைப்பாங்க. இப்ப கூட ஒருத்தர் என்னப்பா அன்னையர் தினத்துக்கு ஃபீல் பண்ணி ஒரு வாரம் ஸ்டேட்டஸ் போட்ட, தந்தையர் தினத்துக்கு ஸ்டேட்டஸே கானோம்னு கேட்டா, எங்கப்பா பத்தி எழுத ஸ்டேட்டஸ்ல இடம் இல்லனு சொல்ற‌ அளவுக்கு நிறைய பண்ணிருப்பாங்க.. அப்பாவிடம் பேசும் போது ஒரு பயம் இருந்தாலும் அவர் எனக்கு ஒரு ப்ரெண்டு மாதிரினு சொல்ல வைக்குர வாரனம் ஆயிரம் கிருஷணன் கேரக்டர எல்லாருமே கடந்து வந்திருப்போம்..

அவர்கிட்ட இருந்து அடியும் வாங்கி இருக்கேன். அன்பா தோள் மேல கைபோட்டு பேசியும் பாத்து இருக்கேன். எனக்கு ரோல் மாடல் எங்க அப்பானு சொல்றதுல பெருமையா இருக்கும். அதே சமயத்துல பயமாவும் இருக்கும். ஏன்னா நாளைக்கு என் பையனுக்கு நா ரோல்மாடலா இருப்பேனாங்குற சந்தேகம் தான் அப்படினு சொல்லுற பசங்க நிறைய பேர். அவங்ககிட்ட  ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான். என்ன பத்தின எந்த விஷயத்தையுமே எனக்கிட்ட நேரா பாராட்டி பேச மாட்டாரு. பரவாயில்லை எப்படியோ என்ன பாராட்டுனா சரினு போய்டுவேன்.நம்மையெல்லாம் இவ்வளவு வருஷமா சமாளிச்சதுக்கு அவர்களுக்கு  தினந்தினம் தந்தையர் தின வாழ்த்துக்கள் சொல்லணும். இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா சொல்லிக்கலாம்..,

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!


- ஸ்ரீராம்

படம்: நிவேதா சேகர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ