Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடிக்கடி செல்பி... ஒரு ஷாக் ரிப்போர்ட்!

வீன ரக ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் எனவும், தோல் பாதிக்கும் என்றும் தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்பி மோகம் அதிகரித்து வரும் நிலை நிலையில், எங்கு பார்த்தாலும் உடனடியாக செல்பி எடுத்து அப்டேட் செய்து கொள்கின்றோம்.

மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் போன்கள் மூலம் செல்பி எடுத்துக்கொள்வதால் அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் முகத்தில் சுருக்கம், வயதான தோற்றம் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் செல்பி எடுக்கும் போது, எந்த கையால் செல்போனை பிடித்து கொண்டு செல்பி எடுக்கிறோம் என்பதை, முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என்பதை வைத்து கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து இங்கிலாந்து லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவ இயக்குனர் சைமன் ஜோவாகி, "அதிகமாக செல்பி எடுக்கும் போது ஸ்மார்ட்போன்களிலிருந்து வரும் நீல ஒளி கூட நம் தோலை பாதிக்கும். மேலும், மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (DNA) அழித்துவிடும். அதன் விளைவாக நம் முகத்தில் உள்ள தோல் விரைவில் வயதானது போல தோற்றம் கொண்டு, சுருக்கங்கள் அதிகரித்து விடும்" எனக் கூறியுள்ளார்.

ரா.நிரஞ்சனா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ