Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் CCTV கேமராவுடன் இயங்கும் தனியார் பேருந்து! (படங்கள்)

மதுரைக்குள்..பார்த்தவுடன் நம்மை அடடே சொல்ல வைக்கும் இன்னொரு ஆச்சரியமான விஷயம்தான் CCTVகண்காணிப்பு கேமராவுடன் இயங்கும் தனியார் 'மினி பஸ்'.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து மகாத்மா காந்தி நகர் வரை செல்லும்,  இந்த பேருந்தில் நான்கு பாதுகாப்பு காரணங்களுக்காக CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு பேருந்தில் ஏறுவோர், இறங்குவோர், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப் படுகின்றன.

பேருந்தின் உரிமையாளர் திரு.உத்தமன் கூறுகையில் "இந்த முயற்சியின் முக்கிய நோக்கமே பயணிகளின் பாதுகாப்புக்காகத்தான், கேமரா பொறுத்தியதில் இருந்து பிக்பாக்கெட் தொல்லையே இல்லை. பேருந்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று என்னால் எங்கிருந்தும் என் மொபைலில் பார்க்கலாம், இதனால் ஊழியர்களையும் கண்காணிக்க முடிகிறது" என்று கூறினார்.

 

பேருந்தில் 4 கேமராக்கள் பொருத்த இருபதாயிரம் ரூபாய் செலவு ஆனது. பராமரிப்புச் செலவு ஒன்றும் பெரியதாக இல்லை என்று கூறப்படுகிறது

அரசு பேருந்துகளிலும் இந்த வசதி இருந்தால் பல குற்றங்களைத் தவிர்கலாம் என்று பயணிகள் கூறுகின்றனர்.  

- க.விக்னேஷ்வரன்

(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ