Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வவ்வால் வாழ்க்கை: அந்தரத்தில் தொங்கும் சர்க்கஸ் தொழில்!

லகம் நாளை ஒலிம்பிக்கை ஆவலோடு எதிபார்த்து இருக்கிறது... உள்ளூரில் இருக்கும் ஒலிம்பிக் வீரர்களை கண்டு கொள்ளாமல்!

அழகான உருவத்தைக் கொடுத்த இயற்கை, அவர்களுக்கு அழகான வாழ்வைத் தரவில்லை. ஆம் சாகசங்கள் செய்து நம்மை சந்தோசப்படுத்தும் சர்க்கஸ் தொழிலாளர்களின் வாழ்வில் துளியும் சந்தோசம் இல்லை. சர்க்கஸ் கூடாரங்கள் காட்டிக் கொடுக்கின்றன, அவர்களின் வாழ்வு எவ்வளவு துன்பமிக்கது என்பதை!

'டூப்' போட்டு  நடிக்கும் நடிகர்களின் படங்களுக்கு, திரை அரங்கு வாசல்களில் இருக்கும் கூட்டம் கூட, தங்களின் உயிரையே உடைமையாய் வைத்து சாகசம் செய்யும் சர்க்கஸ் தொழிலாளர்களின் கூடாரம் பக்கம் இல்லை.

 

கம்பியில் நிற்கிறார்கள், நெருப்பில் புகுந்து விளையாடுகிறார்கள், பெல் இல்ல ப்ரேக் இல்ல அடிச்சா துட்டு இல்ல, என்று தெரிந்தும் சைக்கிளில் சாகசம் செய்கிறார்கள், அந்தரத்தில் அநாயாசமாக கயிற்றில் பறக்கிறார்கள். சில பாவையர்கள், கலர் கலராய் நீரைக் குடித்து, குடித்த நீரை ஒருவர் கலர்  கலராய், தனி தனியாய் பிரித்து எடுக்கிறார்,  ஐம்பது கிலோ எடை இரும்பையும் பல் இடுக்கில் கடித்து இன்னொருவர் தூக்குகிறார், பந்துகளை பந்தாடுகிறார், மற்றொருவர், வளையங்களை கை வளையல்கள் என்று நினைத்து தங்கள் உடல்களை  வளைத்தும் நெளித்தும் நடனமாடுகிறார்கள். நாட்டிய மங்கைகள். பார்வையாளர்கள் தங்கள் புருவங்களை உயர்த்தி நுனி இருக்கையில் வந்து அமர்ந்து, சாகசங்களை கண்டு வியக்கிறார்கள். சிறார்களின் ஆரவார சத்தம் சர்க்கஸ் தொழிலாளர்களின் வலியை போக்குகிறது.

சர்க்கஸ் தொழிலின் இன்றைய நிலைகுறித்து நம்மிடம் பேசினார்  ராஜ் கமல் சர்க்கஸ் பொது மேலாளர், முஸ்தபா. அவர் கூறுகையில்,

 

"எனக்கு சொந்த ஊரு ஈரோடு , இந்த சர்கஸ் கம்பெனில தான் எங்க அப்பாவும் இருந்தாரு, நான்  இருபத்தி அஞ்சு வருசமா, நான் இந்த தொழில்ல இருக்கேன். இதுக்கு முன்னாடியே, இந்த தர்மபுரில நாங்க சர்க்கஸ் போட்டு இருக்கோம். இந்த முறை தான் கூட்டம் ரொம்ப கம்மியா இருக்கு. இப்ப எல்லாம் கம்யூட்டர் வந்துட்டதால யாரும் சர்க்கஸ் பாக்க வரமாட்டேங்கிறாங்க. இதுக்கு முன்னாடி சிங்கம், புலி, குதிரைனு நிறைய விலங்குகளும் இருக்கும். இப்போ கிளி, நாய்னு எதுவுமே இல்ல. அரசியல்வாதிகள் நடத்துற சர்க்கஸ்ல எல்லா விலங்குகளையும் பயன்படுத்துறாங்க.

 

ஆனா, அவர்களை யாரும் கேள்வி கேட்கிறது இல்ல. இங்க இருக்கிறவங்கள நிறைய பேரு மணிப்பூர்காரங்கதான். அவங்க, இல்லனா இந்தியாவுல சர்க்கஸ்ஸே இல்ல. கேரளா அரசாங்கம் தான், சர்க்கஸ்க்குனு தனியா ஒரு நிறுவனத்தையே நடத்துது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள்ல கூடப் பரவாயில்லை, சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் செஞ்சு தராங்க. ஆனா தமிழ் நாட்டுல தான் சர்க்கஸ் தொழிலாளர்களை ஒரு மனிதர்களாகவே கண்டு கொள்வதில்லை". என்று, தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

- அ.பா.சரவண குமார்
(மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ