Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்பாண்டிச் சீமையிலே... தேரோடும் வீதியிலே...!

 

ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்து, மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாவட்ட வாரியாக நான்கு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. ஏற்கெனவே ஆறு கட்சிகள்   இருந்த அணியில், தற்போது எஞ்சி இருப்பது நான்குதான். இன்னும் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பார்க்கலாமா...?

*மற்ற கூட்டணிகளுக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. தொகுதிப் பங்கீட்டில் வழக்கம் போலவே யாருக்குக் குறைந்த இடம் ஒதுக்குவது என்பதில்தான் மக்கள் நலக் கூட்டணியில் மாபெரும் கலவரமே வெடிக்கும். 

*மற்ற கட்சிக்காரர்களையும் நடைப்பயணத்துக்கு வரச்சொல்லி பெண்டை நிமித்தும் வைகோ மீது வெறுப்பில் இருக்கும் மற்றவர்கள்,  இந்த முறை அவரையே களத்தில் இறக்கலாம் என தப்புக்கணக்குப் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

*அந்தப் பக்கம் பார்த்தால், 'மக்களுக்காக நேரடியாகப் போராடும் கட்சி நீங்கள்' எனச் சொல்லி, இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் ஆளுக்கு நான்கு மேயர் இடங்களைத் தலையில் கட்ட திருமாவும், வைகோவும் ப்ளான் போட்டால் அதற்கு முதல்நாள் இரவே முத்தரசனும், ஜி.ராமகிருஷ்ணனும் ரகசியமாகப் பேசி முடித்து  ஆப்போடு காத்திருப்பார்கள்.

* 'கூட்டணியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாகச் (?) செயல்பட்ட உங்களுக்கே அத்தனை பெருமையும்' எனச் சொல்லி, அத்தனையையும் வைகோ கையில் திணிக்கப் பார்க்க, உங்க சங்காத்தமே வேணாம் என எதிர் சந்தில் புகுந்து எஸ்கேப் ஆவார் மான்கராத்தே வைகோ .

*'மோடி பேசியதை விட மன்மோகன் சிங் குறைவாகவே பேசினார்' எனச்சொல்லி இப்போதே தாமரைத் தண்டை தழுவிக்கொண்டிருக்கும் வி.சி.க, ம.ந.கூவை மந்தையிலேயே படுக்கப்போட்டுவிட்டு கூட்டணியை கொலாப்ஸ் செய்தாலும் செய்யும். 

டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்!

-விக்கி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ