Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய கிராண்ட் ஐ10-ல் இன்னும் மைலேஜ் கூடுமா? #ExclusivePictures

ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் ஸ்விஃப்ட்டுக்கு செம டஃப் கொடுப்பது, சந்தேகமே இல்லாமல் கிராண்ட் ஐ10தான்! 2013-ல் அறிமுகமான புதிதில் இருந்து இப்போது வரைக்கும், அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களில் ஐந்தாவதோ, மூன்றாவதாகவோ கிராண்ட் ஐ10 கார் இருக்கலாம். இப்போது கிராண்ட் ஐ10-ன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தயாராகி விட்டது. ‘நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு... ஃபேஸ்லிஃப்ட் எதுக்கு?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ‘இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்’ என்பவர்களுக்காகத்தான் அடுத்த கிராண்ட் ஐ10 தயாராகி, சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்ற இதை, நமது மோட்டார் விகடன் வாசகர் பாலகுமார் படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.

பாலகுமார் அனுப்பிய படங்களை வைத்துப் பார்க்கும்போது, கிராண்ட் ஐ10-ன் அலாய் வீல், கிரில், ஹெட்லைட் - டெயில் லைட், பம்பர் என்று வெளிப்புறம் மொத்தமும் மாறியிருக்கிறது. இது தவிர இன்டீரியரில் புதிய கலரில் அப்ஹோல்ஸரி, டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா/பார்க்கிங் சென்ஸார், ZF Sachs தயாரித்த AMT கியர்பாக்ஸ் போன்ற விஷயங்களைப் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. இது வரை வெளிப்புறத்தில் பெப்பியாக இருந்து வந்தாலும், ஓட்டுவதற்கு பெப்பியாக இல்லை என்று கிராண்ட் ஐ10 மீது ஒரு குறை இருந்து வந்தது. அதனை இந்த ஜெர்மன் தயாரிப்பில் வரும் கியர்பாக்ஸால் ஒருவேளை காணாமல் போகலாம். ஆனால், பழைய 1.2, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். டீசலுக்கும் அதே 1.1 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின்தான். இன்னொரு உற்சாகமான விஷயம் என்னவென்றால், கூடுதல் மைலேஜுக்காக இதை ஹூண்டாய் ட்யூன் செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

- ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ