Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொசுக்கடிக்கு பரிசா... நியாயமா யுவர் ஆனர்?

கொசுக்கடி வாங்கினால்தான் இந்தியக் குடிமகனாக இருப்பதற்கான முதல் தகுதி என தினம் தினம் கொசுக்களுடன் உண்டு, உறங்கி, எழுந்திருக்கிறோம். பெரிய பட்ஜெட் படத்தில் கூட 'ரங்குஸ்கி' என்னும் பாத்திரத்திலேயே கொசுக்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் ரஷ்யாவில் வெறும் 43 கொசுக்கடி வாங்கிய காரணத்திற்காக, 9 வயது சிறுமிக்குப் பரிசு கிடைத்துள்ளது. 

ரஷ்யாவில் காட்டுக்குள் மட்டுமே கொசுக்களை பார்க்க முடியும். இந்நிலையில் வருடா வருடம் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது இந்தக் கொசுத்திருவிழா. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை அடுத்த, பெரினிகி என்னும் நகரத்தில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. 

போட்டியாளர்கள் காட்டுக்குள் சென்று ருசியான பழங்களை பறித்துக் கொண்டுவர வேண்டும். மேலும் பழங்களைப் பறிக்கும் இடத்தில் நிறைய கொசுக்கள் இருக்கும். ஆனால் கொசுக்கடியை பொறுத்துக்கொண்டு பழங்களுடன் வர வேண்டும். இவைகள்தான் போட்டியின் விதிமுறைகள். 

அப்படிப் பழங்களைப் பறிக்கச் சென்ற ஒன்பது வயது இலுகினா என்னும் சிறுமி, 43 இடங்களில் கொசுக்கடி வாங்கி முதல் பரிசைப் பெற்றுள்ளார். நம்மளையெல்லாம் விட்டா, ரஷ்யாவில் பல வருடங்களுக்கு நம்ம சாதனையை ஒருவராலும் முறியடிக்க முடியாது. 

இலுகினாவுக்கு வெற்றிக் கோப்பையும், 'மிகவும் ருசியான சிறுமி' என்ற பட்டமும் கிடைத்துள்ளது. இதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் போட்டிகள் முடிந்து பரிசு அறிவித்த அடுத்த கணமே, மருத்துவர்கள் கொசுக்கடிக்கான மருந்துகள் மற்றும் முழு உடல் பரிசோதனை என அனைத்தையும் விரைந்து  செய்கிறார்கள்.

இதில் 2013-ல் கொசுக்கடி வாங்கியவர் 100 கடிகளை வாங்கியிருக்கிறார். அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லையாம்.

என்னக் கொடுமை சார்.... இந்த போட்டியை ஒலிம்பிக்ல வெச்சா நிச்சயமா இந்தியாவுக்குத்தான் தங்கம்! 

- ஷாலினி நியூட்டன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ