Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

38 லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள்..! ஆச்சர்யப்படுத்தும் Dove விளம்பரம்!

நாம் சின்ன வயதில் கற்றுக் கொண்ட நர்சரி ரைம்ஸை இப்போதும் கண்டிப்பாக மறந்திருக்க முடியாது. அந்த பாடலை வைத்து ஒரு வித்தியாசமான விளம்பரத்தை தயாரித்திருக்கிறது 'டவ் சோப்' நிறுவனம். 

விளம்பரம் தொடங்குவதே 'Chbby cheeks dimples chin' பாடலில் இருந்துதான். இதை ஒவ்வொரு வித்தியாசமான இசையையும் கோர்த்துப்  பின்னணியில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் பின்னணியில் பாடப் பாட,  ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளையும் சீன் பை சீனாக காட்டுகிறார்கள். 

சில விளம்பரங்கள், பெண்களுக்கான சிகப்பழகு என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவர்களைக் கவரும் விதமாக சிகப்பழகு கிரீம்களுக்கான விளம்பரத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கூடவே ஒரு கோடி, இரண்டு கோடி என சவால் விடுகிறார்கள். 

ஐஸ்வர்யா ராய் உலக அழகியான பிறகு நடந்த நல்லதும்,கெட்டதுமான ஒரு விஷயம் பல வெளிநாட்டு அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வண்டி வண்டியாக ஃபேர்னஸ் கிரீம்கள், பவுடர்கள் என கொண்டு வந்து ஃப்யூட்டி கிரீம்களை இந்தியாவில் இறக்கியதுதான்.

ஆரம்பத்தில் விலையை மிகவும் குறைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தவர்கள், அதற்குப் பிறகு ஏராளமான பெண்களை அதிகளவில் பயன்படுத்த வைத்தார்கள். அதற்கு தகுந்தாற்போல வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வழியாக பல விளம்பரங்களை ஒளிபரப்பி பெண்களை மேலும் கவர்ந்தார்கள். இதனால் தங்களின் வியாபாரத்திற்கு ஏற்ற இடமாக இந்தியாவை வலுவாக  பயன்படுத்திக் கொண்டார்கள்.

பிற்காலத்தில், சிகப்புதான் அழகு என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்த ஆரம்பித்ததன் விளைவுதான் படங்களிலும், 'சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்' என வசனங்கள் வரும் அளவுக்கு சென்றன. இன்றும் 80% க்கும் மேற்பட்ட பெண்கள் பல வருடங்களாக கிரீம்களை பூசியும் சிகப்பழகு கிடைக்காத நிலையில், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையிலும், பழகிப் போன பழக்க தோஷத்தாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 

அவ்வப்போது அத்திப்பூத்தாற் போல சில விளம்பரங்கள்தான் பெண்களைக்  கெளரவிக்கும் விதமாகவும், தன்னம்பிக்கையை  ஊக்கப்படுத்தும், வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளன. சோப்பு, லிப்ஸ்டிக், காஜல், சென்ட், லெக்கின்ஸ் என பல பொருட்களின் விளம்பரங்கள் இதில் அடங்கும். இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வணிகங்கள் பெண்களுக்கான சாதனங்களை வைத்தே நடைபெறுகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இந்த மூன்று நிமிட 'டவ் ' விளம்பரத்தில் இந்திய தடகள வீராங்கனைகளை Culture Machine’s lifestyle channel ‘Blush’ என்ற யூ-டியூப் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. 

'‘very fair’ cherubs with ‘curly hair’, ‘eyes so blue’ and ‘rosy lips’என பாடல் வரிகள் பின்னால் ஒலிக்க, ஹாக்கி, குத்துச்சண்டை, வில்வித்தை என ஒவ்வொரு தடகள வீரங்கனைகளும் சினிமா மாடல்கள் போல் அல்லாமல் நிறம், கண் அழகு, கன்ன அழகு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்கள். 

இறுதியில் குழந்தைகளுக்குக்  கற்றுக் கொடுக்கும் ஆசிரியை 'இது நீங்களா..?' என கேட்க, 'இல்லை' என தடகள வீரங்கனைகள் பதில் அளிக்கிறார்கள். அதற்குப் பிறகு Is That You? | #ChangeTheRhyme என முடிகிறது இந்த விளம்பரம்.

கடந்த ஆகஸ்ட் 8- ம் தேதி வெளியான இந்த விளம்பரத்தை 38 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும், கமெண்ட் செய்தும் உள்ளனர்.

அந்த விளம்பரம் இங்கே....

 

 

 

-வே. கிருஷ்ணவேணி 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ