Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரக்‌ஷாபந்தனாம்...உஷாரா இருங்க மக்கா!

இன்னிக்குப் பெண்களெல்லாம் பல ஆண்களுக்கு பல்பு கொடுத்துக் கலங்கடிக்கும் தினம். அட.. அதான் பாஸ் ரக்ஷாபந்தன். இன்னிக்கு திடீரெனப் பாசத்தைக் கொட்டி கதறவைக்கும் இந்தப் பெண்களைப் பார்த்து எப்படியெல்லாம் பதறவேண்டியிருக்கு பாருங்க ஃப்ரெண்ட்ஸ்...

* ஆண்கள், பெண்களிடம் கையில் ரோஜாப்பூவைக் கொடுத்துக் காதலிப்பதாகச் சொல்லிக் 'கிலி' கிளப்ப காதலர் தினத்தைத் தேர்ந்தெடுத்தால், தங்களைக் காதலிப்பதாகப் பின்னால் சுற்றும் ஆண்களுக்கு ஆப்படித்து ஆஃப் செய்வதற்காகவே (dialogue courtesy : கேப்டன்) பெண்கள் பெரும்பாலும் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* கையில் 'ராக்கி' கயிறோடு சுற்றும் பெண்களிடம் வகையாகச் சிக்கிவிடக் கூடாதென முதல்நாளே சரக்கைப் போட்டுவிட்டு விடிந்ததுகூடத் தெரியாமல் சாவகாசமாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள் இந்த ஆண்கள்.

* ரக்‌ஷாபந்தனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக்கொடுத்து சகோதரியா ஏத்துக்கச் சொன்னாக்கூட வயிறாரச் சாப்பிட்டுவிட்டு கண்ணீர் மல்க, ஃபேக் ஐ.டி பிரியாவுக்கு பிரியாவிடை கொடுக்கலாம். மெஸேஞ்சர்ல ராக்கிக்கயிறு போட்டோவை அனுப்பி அண்ணானு கதறினா கடுப்பாகுமா இல்லையா?

* ஃபேஸ்புக்லேயும், ட்விட்டர்லேயும் 'திருப்பாச்சி' விஜய் போட்டோவையோ, 'திருப்பதி' அஜீத் போட்டோவையோ ப்ரொஃபைல் பிக்சராகப் பார்த்துப்பார்த்து வெச்சாங்கனா இன்னிக்கு அந்தப்பெண்கள் அண்ணன் சென்டிமென்ட்டில் 'பாசமலர்' படத்தை ரீமேக் பண்ணி ஓட்டப்போறாங்கனு புரிஞ்சுக்கணும். தெரியாம உள்ளே நுழைஞ்சா, கை கொள்ளாமக் கயிறைக் கட்டி அனுப்பிருவாய்ங்க. பாத்துக்கங்க.

* ஆண்களுக்கு ஒரு முக்கியமான அட்வைஸ், நீங்க ஒருதலையாக் காதலிக்கிற பொண்ணு கண்ணில் அன்னிக்கு ஒருநாள் மட்டும் சிக்கிடாமல் வெளியூருக்குத் தப்பிச்சிப் போயிடுங்க. அவங்களோட க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கிற ஏதாவது ஒரு பக்கி உங்களுக்குக் கயிறு கட்டச்சொல்லி மூக்குலேயே சில்லி சாஸ் ஊத்திருக்கும். ஜாக்கிரதை.

* ராக்கிக்கயிறு கட்டி அண்ணானு அன்பொழுக அழைக்க வரும் பெண்களிடம் அப்படியே 'உங்க அப்பாவுக்கு எவ்வளவு சொத்து மொத்தமா இருக்கும்? உனக்கு அண்ணனானா என் பங்கு மட்டும் எத்தனை ஏக்கர் தேறும்?'னு அஞ்சாறு கேள்விகளை அள்ளிப்போட்டோம்னா அதுக்குப்பிறகு எந்த வருசமும் ஃப்ரெண்ட்ஷிப் டேவுக்குக்கூட விஷ் பண்ண மாட்டாய்ங்க.

* அடுத்த வருசமாச்சும் வெறும் கயிறைக் கையில் இறுக்கிக்கட்டி ஏமாற்றாதீங்க. தங்கத்தில் காப்பு செஞ்சு போடச்சொல்லிக் கேட்கலை. ஒரு ஆப்பிள் ஜூஸோ, சாத்துக்குடி ஜூஸோ வாங்கிக்கொடுத்து, வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்துப் பாசமாக அண்ணன்களை அனுப்பிவைங்க. அது போதும் அன்பார்ந்த சகோதரிகளே...


- விக்கி

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close