Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம் கார்டு வாங்க இனி ஆதார் எண் மட்டுமே போதும்!

ரு புறம் எவ்வித சான்றுகளும் இல்லாமலேயே சட்டத்திற்கு புறம்பாக புதிய சிம் கார்டுகள் விற்கப்படும் நிலை இருந்தாலும், அனைத்து சான்றுகளையும் கொடுத்தும் ஏதோ காரணத்தால் உடனடியாக சிம் கார்டுகள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், எவ்வித காகித சான்று எதுவும் இல்லாமல் வெறும் ஆதார் அட்டையைக் கொண்டு, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவரின் தகவல்களை சரிபார்த்து, உடனடியாக சிம் கார்டுகள் அளிப்பதற்கான நடவடிக்கைளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் செய்து வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எட்டு கோடி பேர் புதிய சிம் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கின்றனர். போஸ்ட்பெய்ட் இணைப்போ அல்லது ப்ரீபெய்ட் இணைப்போ இரண்டுக்கும் கண்டிப்பாக முகவரி சான்று, சுயவிவரச் சான்று என பல சான்றுகளையும், புகைப்படத்தையும் அளிக்க வேண்டியுள்ளது. இதற்கான காகித தேவைக்காக,  அதற்கு மூலப்பொருளான மரங்கள் சுமார் 50,000 வரை வெட்டப்படுகின்றன.

தற்போது அரசாங்கம், அதன் பல்வேறு சேவைகளில், மக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துக்  கொள்ளும்படியும், ஆதாரை ஒரு அடையாள ஆவணமாகவும் அங்கீகரித்து வரும் நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 'இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய' அமைப்பானது, நமது ஒவ்வொருவரின் பெயர், பிறந்த தேதி, விலாசம், புகைப்படம், கருவிழிப்பதிவு, கைரேகை, அங்க அடையாளங்களின் தகவல்கள், கைபேசி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல்வேறு தகவல்களை திரட்டி மின்னணு வடிவில் பதிவேற்றி வைத்துள்ளது.

அதன்படி ஒருவர் சிம் கார்டு வாங்க விண்ணப்பிக்கும்போது, வெறும் ஆதார் எண்ணை மட்டும், இதற்கென அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் அளித்தால் போதும், அதை அங்குள்ள பணியாளர்கள் ஆன்லைனிலேயே சரிபார்த்து, உடனடியாக சிம் கார்டு வழங்கும் நடவடிக்கைகளை எடுப்பர். இதற்கான சோதனைகள் மற்றும் விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை, விரைவில் இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மரங்களும், கோடிக்கணக்கான ஆவணங்களை சேமிக்கும், பாதுகாக்கும் நேர விரயமும் தவிர்க்கப்படும்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், மத்திய தொலைத்தொடர்புத்துறை இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு  முன்னரே, அதாவது இன்னும் சில தினங்களில் ஆதாரை மட்டும் ஆன்லைன் மூலமாக சரிபார்த்து, சிம் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

- ஜெ. சாய்ராம்

(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ