Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேன்ஷன் டென்ஷன்கள்! - 'நம்ம சென்னை' கொண்டாட்டம்!

சென்னை என்றதும் பலர் நினைவுக்கு வருவது 'காதல்' படத்தின் சேவல்பண்ணை மேன்சன்கள். 'புறாக்கூண்டு போல இங்கே முப்பது ரூமு' என்றில்லாவிட்டாலும் சென்னை மேன்சன்கள் பலவிதப்படும். அந்த அழியாத கோலங்களில் கொஞ்சம்...

* 'வாடகை ரொம்பக் கம்மி, அட்வான்ஸ் தரவே தேவையில்லை'னு சொல்ற ஆட்களை நம்பிப் போனீங்கனா அதிர்ச்சியடைய நேரிடும். எப்படிப் படுத்துக் கால் நீட்டினாலும் சுவர் இடிக்கிற மாதிரி ரூம்தான். கட்டில்னு ஒண்ணு இருக்கும். 'அது கட்டில் இல்லை ப்ரோ. நீளமான மரப்பலகை'னு நீங்கதான் சொல்லிட்டுத் திரியணும். காற்று வசதியுள்ள அறைனு சொன்னீங்களேய்யா...இப்படி ஜன்னல் கண்ணாடி உடைஞ்சி வானமே தெரியற அளவுக்கு காற்று வரும்னு சொல்லவே இல்லைனு நீங்க சொல்லவே முடியாது.

* லோக்கல் டான்கள் சரக்கு மாற்றிக்கொள்ள தேந்தெடுக்கும் ரகசிய அறைகள் நிறைந்த குடோன் போல, சில மேன்சன்களில் படிகளெல்லாம் வெற்றிலை எச்சில்கள் தெறித்திருக்கும். இது 60 வயது நிரம்பிய பேச்சுலர்ஸ் மேன்சன் போல.

* வோட்டர் ஐ டி இருக்கா, ஆதார் ஆதாரம் இருக்கான்னு ஏகப்பட்ட கேள்விகளோட ரூம் கொடுத்தாலும் கிடைக்கிற ரூம்ல தண்ணி வசதிகூட இருக்காது. மோட்டார் போடச் சொல்லி அரைமணி நேரம் கதறினா அலட்சியமா வரும் தண்ணி கன்னங்கரேல்னு இருக்கும். உங்களுக்கு வாட்டர் டேங்க் சுத்தம் பண்ண வேற நேரமே கிடையாதா பக்கீஸ்.

* இன்னும் கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்து ரூம் பார்த்தா, நல்லாதான் இருக்கும். என்ன ஒண்ணு ஸ்ட்ரிக்ட் அண்ட் ரூல்ஸ்லாம் கொஞ்சம் ஓவராவே போகும். 11 மணிக்கு மெயின் டோர் க்ளோஸாகிடும். பின்வாசல் வழியா வந்தா பூட்டியிருக்கும். கேட்டைப் பிடிச்சு ஆட்டினா எரிச்சலா எழுந்திரிச்சி வந்து கதவு திறக்கிற இன்சார்ஜ்கிட்ட நைட் ஷிஃப்ட் கதையை விடிஞ்சபிறகு சொன்னா கேட்கவே மாட்டாங்க.

* நம்மைக் கேள்வியே கேட்காத நம் இஷ்டத்துக்கு அனுமதிக்கிற சில மேன்சன்களில் நாம தூங்கிக்கிட்டு இருக்கிற நடுராத்திரியில் கதவு தட்டப்படும். இந்நேரத்தில் யாருனு கதவு திறந்தா காற்று வராது, சரக்கு வாடை நம்ம மூக்குல உரசும். 'ஸாரி நண்பா..இது என் ரூம் இல்லை போல'னு ஒருத்தன் தள்ளாடிக்கிட்டே படியேறிப் போவான். டேய் இது உன் ரூம் இல்லைடா... நான் உன் நண்பனும் இல்லைடானு நாம மிட்நைட்ல தூக்கத்துக்கு குட்நைட் சொல்லிடுவோம்.

* சி சி டி.வி கேமரால்லாம் வெச்சு மெயின்டெயின் பண்ற மேன்சன்லதான் எல்லா ரூம்லையும் சிவராத்திரியா இருக்கும். நடுராத்திரி உச்சா போக பாத்ரூம் போனா, பாட்டுக் கச்சேரி நம்ம பாத்ரூமுக்குள்ள நடக்கும். அய்யோ முனி பேயான்னு முழிச்சி முழிச்சிப் பார்த்தா, நம்ம ரூமுக்கு நேர் மேல உள்ள இன்னொரு குடிம்கனோட ரூம் கான்வர்சேஷனை எந்த சென்சார் இல்லாமலும் கேட்கலாம்.

இன்னும் சொல்லலாம் பாஸ் மேன்சன் டென்சன்கள். ஏன்னா அது சிறுகதையல்ல... எழுதித் தீராத நாவல்.

- கே.கணேஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ