Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் வாகனத்தை அழகாகப் படம்பிடிக்க சில சிம்பிள் டிப்ஸ்! #Photography

நம் ஒவ்வொருவரும் தினம் தினம் ஏதாவதொரு வகையில் பயணித்துக்கொண்டே தான் இருக்கிறோம். அன்றாட வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பயணிப்பது எப்போதும் சுவாரசியமானது. அது போல அந்த பயணங்களின் புகைப்படங்கள் காலத்துக்கும் கதை சொல்லி நினைவுகளை ரிவைண்ட் செய்யும். பயணம் என்றாலே நாம் பயணிக்கும் காரோ,பைக்கோ தான் முதல் துணை. நம்மை படம் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நம் இயந்திர நண்பனையும் படம் எடுத்து வைத்து பத்திரப்படுத்த வேண்டும்  என பலமுறை நினைத்திருப்போம். வாகனங்களை எடுக்கும் போது அந்த படம் இயல்பாகவும் வாகனத்தின் 
கம்பீரமும் சேர்ந்தவாறு இருக்க வேண்டும். அடுத்த முறை கிளிக்கும் போது இந்த டிப்ஸ்களையும் கவனத்தில் வையுங்கள்.

புகைப்படக்  கலையே ஒரு ஒளி விளையாட்டு தானே. வாகனங்களை படம் எடுக்கும் போது ஒளியை கவனத்தில் கொள்வது ரொம்ப முக்கியம். அதிக வெளிச்சத்தில் படம் எடுக்கும் போது வாகனத்தின் சில்வர் கோட்டிங் பகுதிகள் எதிரொலிக்கும் இது புகைப்படத்தின் மீதான கவனத்தை திசை திருப்பும். அதிகாலை நேரங்களிலோ, மாலையில் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்கள் முன்போ படம் எடுப்பது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

புகைப்படம் எடுக்கும் போது கேமராவை ஒரு நிலையான இடத்தில் வைத்து எடுங்கள். இது படம் தெளிவாய் அமைய உதவும். முடிந்தால் கையோடு ட்ரைபாட் கொண்டு செல்லுங்கள்.

வாகனத்திலிருந்து சிறிது தள்ளி இருந்தே படம் எடுங்கள். அருகிலேயே நின்று எடுக்கும் போது உங்கள் நிழலும் வாகனத்தில் தெரியும். இதனால் காரின் அழகான வளைவுகளை தெளிவாக காட்ட முடியாமல் போகும்.

சில காமிராக்களில் மோஷன் ப்ளர் (Motion Blur) என்று ஒரு வசதி உள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வாகனத்திற்கு 1/125 என்ற வீதத்தில் ஷட்டர் வேகத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி வாகனத்தின்
பின்னணி வேகமாய் நகர்வது போலவும். வாகனம் தெளிவாகவும் இருப்பதை போல செய்ய முடியும். மோஷன் ப்ளர் வசதி மூலம் படம் எடுக்கும் போது ட்ரைபாடை பயன்படுத்தி எடுக்கவும்.

 முடிந்த வரையில் வாகனத்தை சுற்றி வெற்றிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காமிராவை ட்ரை பாடில் பொருத்தி விட்டு. டைமரில் வைத்தும் படம் எடுக்கலாம்.பெரும்பாலும் எல்லாக் புகைப்பட கருவிகளிலுமே டைமர் வசதி உள்ளது.

 வாகனம் பார்க்கிங்கில் நிற்கும் பொழுது  படம் எடுப்பதை தவிருங்கள். நல்ல பின்னணியை தேர்வு செய்யுங்கள். வாகனத்தின் பின்னணியில் தெரியும் ஒரு குப்பை தொட்டியோ, மின் கம்பிகளோ கூட ரிசல்ட்டை பாதிக்கும்.

 இரவுகளில் படம் எடுக்கும் பொழுது வாகனத்திற்கு மேல் மின்கம்பங்கள் இருப்பதை தவிருங்கள். இதனால் காரின் மேல் பகுதி மட்டும் தனியாக தெரியும். இரவு நேரங்களில் படம் எடுக்கும் பொழுது குறைந்த ஒளி கூட போதுமானதாக இருக்கும். தேவையற்ற செயற்கையான வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்.  .

இயற்கையான பின்னணிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.ஒவ்வொரு முறையும் புதிதாக முயற்சி செய்யுங்கள்.ஸ்போர்ட்ஸ் ரக கார்களுக்கு கரடுமுரடான மலைப்பகுதியும்,கூழாங்கற்கள் நிறைந்த ஒரு ஆற்றங்கரையும் கூட நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

ரெடி ஸ்டார்ட் க்ளிக் ..!

-க. பாலாஜி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ