Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேதன் பகத்.. மெட்ராஸ் டே! #ஆன்லைன் டாக்ஸ் #Onlinetalks

One Indian Girl

ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்டுக்குப் பிறகு சேத்தன் பகத் எழுதியிருக்கும் அடுத்த புத்தகம் தான் ஒன் இண்டியன் கேர்ள். அதற்கான டீசர் அறிப்பு தான் விஷயமே." ஹாய், நான் ராதிகா மேத்தா எனக்கு இந்த வாரத்தில் திருமணம். என்னுடைய கதையைப் படிப்பதற்கு நன்றி. எதுக்கும் நான் உங்களை எச்சரிச்சுக்குறேன். உங்களுக்கு என்ன அதிகம் பிடிக்காமப் போறதுக்கும் வாய்ப்பிருக்கு. ஒன்னு, நான் நிறைய பணம் சம்பாதிக்கறேன், ரெண்டு எனக்கு எல்லாத்திலும் ஒரு கருத்து உண்டு, மூனு நான் இதுக்கு முன்னாலயே செக்ஸ் வெச்சிருக்கேன்" என தொடர்கிறது அந்த டீசரில் வரும் கதை தொடர்ச்சி. இந்த முறை ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். புத்தகம் அக்டோபர் 1 வெளியாகிறது. அமேசான் ப்ரீ புக்கிங்கில் இப்போதே ரெக்கார்ட் அடித்துவிட்டதாம் புத்தகம்.  'ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்' போலவே சீக்கிரம் இதுவும் சினிமாவாகிறது என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

ONE INDIAN GIRL - Book Teaser

 

 

#MadrasDay

வீடியோக்கள், போட்டோக்கள், மீம்கள் என வரிசைகட்டி வாழ்த்துகள் குவிகின்றன 377வது சென்னை தினத்திற்கு. இதுதான்டா சென்னை கெத்து என ஆரம்பித்து சென்னையுடன் தங்கள் உறவை காட்டும் ஸ்டேட்டஸ்கள், பழைய சென்னை எப்படி இருந்தது தெரியுமா என காட்டும் போட்டோக்கள் நாஸ்டாலஜியா ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் இன்றைய ட்ரெண்டிங். வாழ வைக்கும் சென்னைக்கு வாழ்த்துகள். ஆனா, என்ன தான் சென்னைனு பேர் மாத்தினாலும் மெட்ராஸ் தான் ட்ரெண்ட் ஆகுது. சென்னை இஸ் எ நேம், மெட்ராஸ் இஸ் எமோஷன்!

#‎LittleThingsAboutYou‬

எது நம்மை அழகாக வைத்திருக்கிறது? நம்முடைய சின்னச் சின்ன குறைகள் தான். இந்த கான்செப்ட் வைத்து ஒரு வீடியோ இணையத்தில் கலக்கிக் கொண்டிருந்தது. பெண்களை மையப்படுத்தி பிரசண்ட் செய்திருக்கும் விதம் அசத்தல். சத்தமாக சிரிப்பது தொடங்கி, ஹேர்ஸ்டைல், சின்னதாக ஒரு டான்ஸ் என குட்டி குட்டியான அழகுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சுஷ்மிதா முகர்ஜி மற்றும் MensXP டீம்.

 

 

Brett Lee

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ப்ரெட் லீயும் இன்றைய ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார். காரணம் கிரிக்கெட் கிடையாது சினிமா. ஆம், சினிமா தான். இவர் நடித்திருக்கும் அன்இன்டியன் படம் வெளியாக, விமர்சனங்கள் முழுக்க ப்ரெட் லீயின் நடிப்பைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'ஆச்சரியப்படுத்தும் விதமாக கேமரா முன் மிக இயற்கையாக நடித்திருக்கிறார் ப்ரெட் லீ' என்கிறது விமர்சனங்கள். அவார்டுக்கு சொல்லிறலாமா?

UnIndian ட்ரெய்லருக்கு:-

 

 

-பா.ஜான்சன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ