Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் வருகிறது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் பைக்!

 

‘பைக்லாம் நமக்கு செட் ஆகாதுங்க; கியர் மாத்திக்கிட்டு... க்ளட்ச் பிடிச்சுக்கிட்டு’ என்பவர்களுக்காக, ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் வந்தது. ‘ஸ்கூட்டர் ரொம்ப வெயிட்டுங்க; லைசென்ஸ் எடுக்கணும்; பெட்ரோல் போடணும்’ என்பவர்களுக்காக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தது. இதை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இதற்கு லைசென்ஸ் கிடையாது; எடை ரொம்பக் குறைவு; ஈஸியாகக் கையாளலாம். அப்படி மார்க்கெட்டில் சைக்கிள் டைப்பிலோ, ஸ்கூட்டர் டைப்பிலோதான் எலெக்ட்ரிக் பைக்குகள் இருக்கின்றன. ஆனால், இப்போது ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் முதன் முதலாகக் களம் இறங்க இருக்கிறது.

 

 

'டார்க்' என்னும் புனேவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனத்தின் சார்பாக வருகிறது டார்க் T6X. நார்லமான ஸ்கூட்டர் டைப்பில் இல்லாமல், ஆண்கள் ஓட்டக் கூடிய வகையில் பைக் போலவே செம ஸ்டைலாக இருக்கிறது. T6X-ன் கெத்து என்னவென்றால், இது மார்க்கெட்டில் இருக்கும் 125 சிசி பைக்குகளோடு போட்டி போட இருக்கிறது என்பதுதான். மற்ற எலெக்ட்ரிக் பைக்குகள்போல் இல்லாமல், விடிய விடிய சார்ஜ் ஏற்ற வேண்டியதில்லை. 1 மணி நேரத்துக்கு 80% சதவிகிதம் வரை சார்ஜ் ஏற்றிக்கொள்கிறது இதில் உள்ள லித்தியம் ஐயன் பேட்டரி. 2 மணி நேரத்தில் பைக் மொத்தமாக சார்ஜ் ஏறிவிடும் என்கிறது டார்க் நிறுவனம். எலெக்ட்ரிக் பைக்குகளின் மிகப் பெரிய குறை - இருக்கும் சார்ஜை மட்டும் வைத்துக்கொண்டு அதிக தூரம் பயணிக்க முடியாது என்பதுதான். ஆனால், T6X பைக்கில் நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க - சார்ஜ் ஏறிக் கொண்டே செல்லும் வகையில் இதன் மெக்கானிசம் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. வால்வோ, லெக்ஸஸ் போன்ற கார்களில் இந்த ஆப்ஷன் உண்டு. மேலும், இதில் டாப் ஸ்பீடு 85 கி.மீ வரை பறக்கலாம் என்றும் சொல்கிறது டார்க். 

எல்லாம் ஓகே! ஆனால், நம் 'மின்மிகை' மாநிலத்துக்கு இது எந்த வகையில் எடுபடும் என்று தெரியவில்லை. 

ஆமா.. நம்ம பவர் பேங்க் வெச்சுகிட்டு சார்ஜ் ஏத்திக்கலாமா பாஸ்?

- தமிழ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ