Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

68bhp பவருடன் அறிமுகமானது ரெனோ க்விட் 1.0

டெல்லியில் இன்று அறிமுகமானது ரெனோ க்விட் 1.0!

மினி எஸ்யூவி போலக் காட்சியளித்த ரெனோ க்விட் காரின் முக்கியப் போட்டியாளர்களான மாருதி சுஸூகி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய கார்களில் 800சிசி மற்றும் 1,000சிசி இன்ஜின் ஆப்ஷன் இருந்தன. இந்தக் காரின் மைனஸ் அதன் இன்ஜின்தான். தற்போது அந்தக் குறையைப் போக்கும் விதமாக, 1,000 சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட க்விட் காரை, RXT & RXT (O) ஆகிய வேரியன்ட்களில் முறையே, 3.83 லட்சம் மற்றும் 3.96 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது ரெனோ.

68bhp பவர் - 9.1kgm டார்க் - 23.01kmpl ARAI மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது இந்த 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் AMT கியர்பாக்ஸ் உடன் காட்சிபடுத்தப்பட்டிருந்ததால், அதனுடனே காரை ரெனோ அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் AMT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட க்விட் காரை இந்த வருட இறுதிக்குள் களமிறக்கும் எனத் தெரிகிறது.

800சிசி மற்றும் 1,000சிசி மாடல்களுக்கு இடையேயான வித்தியாசங்களாக, சில்வர் ஃபினிஷ் கொண்ட மிரர்கள், கதவுகளில் 1.0 லிட்டர் கிராஃபிக்ஸ், Pro-Sense சீட் பெல்ட் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். டாப் வேரியன்ட்டில் மட்டுமே 1,000சிசி க்விட் கிடைப்பதால், 800சிசி மாடலில் இருந்த MediaNav டச் ஸ்கிரின் சிஸ்டம், டூயல் டோன் கேபின், கிலெஸ் என்ட்ரி, சென்டரல் லாக்கிங், ஓட்டுனருக்கான காற்றுப்பை, முன்பக்க பவர் விண்டோஸ் ஆகியவை இதிலும் இடம்பிடித்துள்ளன. புதிய இன்ஜின் காரணமாக, 800சிசி மாடலுடன் ஒப்பிடும்போது 1,000சிசி மாடலின் எடை 40 கிலோ அதிகரித்திருக்கிறது (700 கிலோ). ஆனால் Power To Weight Ratio-வில் ரெனோ க்விட் முன்னிலை வகிப்பதால் (97bhp/ton), இது ஒரு பிரச்சனையாக இருக்காது எனலாம். இந்த கார் அறிமுகமாகி இன்னும் ஒரு ஆண்டே நிறைவடையாத நிலையில், 80,000 கார்களை விற்றுத் திர்ந்துள்ளதுடன், 1.65 லட்சம் புக்கிங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆக ஆல்ட்டோவை க்விட் வீழ்த்தக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

- ராகுல் சிவகுரு

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ