Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவதார் மலையில் இன்னோர் ஆச்சர்யம்!

ஹாலிவுட் திரைப்படம், 'அவதார்' பார்த்திருப்பீர்கள்தானே. அந்தப் படத்தில் காணும் மலைப்பிரதேசம், எல்லோருடைய மனதை கொள்ளையடித்திருக்கும். அந்த அழகான மலைப்பிரதேசம், மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தின் ஸாங்ஜியாஜி (Zhangjiajie) பூங்காவில் அமைந்துள்ளது. அதைக் காண்பதற்கென்றே இப்போது, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு குவிகிறார்கள். சுற்றுலாத்தலமாக மாறியிருக்கும் இந்தப் பகுதிக்கு, இன்னோர் ஆச்சர்யமும் சேர்ந்துவிட்டது.

உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் நீளமான கண்ணாடிப் பாலம் இங்குதான் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தைக் கடப்பவர்களுக்கு நிஜமாகவே 'தில்' இருக்கவேண்டும். சுமார், 1,400 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம், தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில், இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கிறது. 6 மீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாலத்தை, தெளிவாகத் தெரியும் 99 கண்ணாடி பேனல்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். ஒரே நேரத்தில், 800 பேர் இந்தப் பாலத்தைக் கடந்துசெல்லலாம். இதை வடிவமைத்தவர், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஹைம் டோடன் (Haim Dotan). இந்தப் பாலத்தின் மீது பங்கி ஜம்ப் போன்ற சாகசங்களைச் செய்யலாம்.

இந்தக் கண்ணாடிப் பாலம் மிகவும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க எண்ணிய அதிகாரிகள், பாலத்தின் மீது கார் ஓட்டிச் சென்றும் சுத்தியால் அடித்துக்காட்டியும், கண்ணாடிப் பாலம் உடையாது என்று சுற்றுலாப் பயணிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி திறக்கப்பட்ட இந்தக் காண்ணாடிப் பாலத்தின் மீது நடந்து, 'த்ரில்' அனுபவத்தைப் பெற, ஒரு நாளைக்கு 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக, ஒரு நபருக்கு சுமார் 1,800 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு, இதேபோன்ற கண்ணாடிப் பாலம், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் திறக்கப்பட்டது. ஆனால், அதைவிட இந்தப் பாலமே பெரியது. இந்தப் பாலத்தைக் கடந்து, புதிய 'த்ரில்' அனுபவத்தைப் பெற, சுற்றுலாப் பயணிகள் க்யூவில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

- என்.மல்லிகார்ஜுனா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ