Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய எலான்ட்ராவின் விலை வெறும் 12.99 லட்சம்தான்!

உலகெங்கும் தான் விற்பனை செய்யும் பிரிமியம் செடான் காரான எலான்ட்ராவின் 6வது ஜெனரேஷன் மாடலை, இன்று 12.99 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய்.

கடந்தாண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் முதன்முறையாக காட்சிபடுத்தப்பட்ட இந்த காரின் புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், S, SX, SX AT, SX(O), SX(O) AT எனும் 5 வேரியன்ட்கள் மற்றும் 5 கலர் ஆப்ஷன்களுடன் 2016-ம் ஆண்டுக்கான எலான்ட்ரா களமிறங்கியுள்ளது. புதிய எலான்ட்ராவின் டிஸைன், பழைய காரையே நினைவுபடுத்தினாலும், காரை உற்று நோக்கும்போது பெரிய அறுகோண வடிவ கிரில், HID ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL மற்றும் டெயில் லைட்ஸ், ஸ்டைலான 16 இன்ச் அலாய் வீல்கள், ஷார்ப்பான பாடி லைன்கள், சிறிய ஸ்பாய்லர் என மாற்றங்கள் தென்படுகின்றன. இதன் வீல்பேஸில் (2700மிமீ) மாற்றம் இல்லாவிட்டாலும், இது பழைய காரை விட 80மிமி அதிக நீளம், 25மிமி அதிக அகலம் என வளர்ந்திருப்பதால், இடவசதி முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தவிர காரின் உயரம் 20மிமீ குறைந்துள்ளதால், நல்ல ஏரோடைனமிக்ஸ் கிடைக்கும் (0.29 Drag) என்கிறது ஹூண்டாய்.

உறுதியான கட்டுமானத்தைக் கொண்டுள்ள புதிய எலான்ட்ராவின் கேபினில், சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் லெதர் சீட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவற்றுடன் தொடுவதற்கு மிருதுவான பிளாஸ்டிக்குகளால் காரின் டேஷ்போர்டு புதிய டிஸைனில் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. GPS, ப்ளூடுத், AUX-USB, ரிவர்ஸ் கேமரா வசதிகளைக் கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரின் சிஸ்டத்தில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களை இணைக்க முடியும் என்பது சிறப்பு. 152bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தவிர, பழைய காரில் இருந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் - மேனுவல் கியர்பாக்ஸ் (டிரைவிங் மோடுகள் உடன்) கூட்டணியோடு களமிறங்குகிறது. செவர்லே க்ரூஸ், டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, ஸ்கோடா ஆக்டேவியா ரெனோ ஃப்ளூயன்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் புதிய எலான்ட்ரா, புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பாதுகாப்பு திறனை அறிவதற்காக, Insurance Institute for Highway Safety (IIHS) அமைப்பு இந்த காரை க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது. ABS, EBD, ESC, 6 காற்றுப்பைகள் Vehicle Stability Control ஆகியவை இருந்ததால், அதில் Top Safety Pick+ ரேட்டிங்கைப் பெற்று அசத்தியுள்ளது புதிய எலான்ட்ரா என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 2016 வரை இருக்கக்கூடிய புதிய எலான்ட்ராவின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் (பெட்ரோல்/டீசல்) பின்வருமாறு;

S - 12.99 lakh/Rs 14.79 lakh
SX - 14.79 lakh/Rs 16.39 lakh
SX AT - 15.89 lakh
SX(O) - 16.59 lakh/17.69 lakh
SX(O) AT - 17.99 lakh/19.19 lakh

-ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ