Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஜ ‘செல்ஃபிபுள்ள’ யார்னு தெரியுமா? #OnlineTalks

Celebrating 25 Years of Connecting People: WWW

25 வருஷத்துக்கு முன்னால் என இணையவாசிகள் எல்லோரும் ஃப்ளாஷ் போக் போக நாள் இது. 1989ம் ஆண்டு இதே நாளில் தான் இன்டர்நெட் அதாவது வேர்ல்ட் வைடு வெப் (WWW) டிம் பெர்னர்ஸ் லீயால் கண்டுபிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக் , ட்விட்டர், யூடியூப், விக்கிபீடியா என எல்லாம் வரக் காரணம் இந்த ஒரு நாளில் வந்த கண்டுபிடிப்பால் தான். ஹேப்பி இன்டர்நெட் டே பீப்பிள்ஸ்...!


Angela Nikolau : செல்ஃபி புள்ள

இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஆரம்பத்திலேயே அபாய அறிவிப்பானு நினைக்காதீங்க, விஷயம் அந்த மாதிரி. ரஷ்யாவில் ஒரு செல்ஃபிபுள்ள அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் ஏஞ்சலா நிக்கோலு. இவர் எடுக்கும் செல்ஃபிகளும், போட்டோக்களும் உதட்டைக் குவித்து எடுப்பதோ, இரண்டு விரலை காட்டிக் கொண்டு எடுப்பதோ இல்லை. உயரமான இடங்களுக்குச் சென்று விளிம்புகளில் நின்று கொண்டு எடுப்பது தான் ஏஞ்சலா ஸ்டைலே. இன்ஸ்டாகிராமில் இவர் போட்டோக்கள் அனைத்துக்கும் ஹார்டீன்கள் குவிகிறது. ஒரு போட்டோவுக்கு அக்கப்போறா...


Rs 100

குறிப்பிட்டு சொல்ல முடியாது, பல்வேறு காரணங்களுக்காக ரூபாய்100 இன்றைக்கு ட்விட்டரில் இந்திய ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. 

காரணம் 1:

காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் பீஹார் கவர்னருமான டி.ஒய் படீல் மகன் அஜென்கியா படீல் மும்பையின் வோர்லி ஸ்லீவரென்ஸ் டெரஸில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள ட்ரிபிள் டூப்லெக்ஸ் அப்பார்ட்மெண்டை வாங்கியிருக்கிறார்.

காரணம் 2:

கத்தாரை சேர்ந்த கப்பல் கம்பெனி டெல்டா ஷிப்பிங் மரைன் சர்விஸுக்கு 2011ல் மும்பை கடலில் எண்ணைக் கசிவை நிகழ்த்தியதற்காக ரூபாய் 100 கோடியை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது நேஷனல் க்ரீன் ட்ரிப்யூனல்.

காரணம் 3:

ஹைதிராபாத் ட்ராஃபிக் சிக்னல் சிஸ்டத்தை ஆட்டோமேட்டட் சிஸ்டமாகவும், ஸ்மார்ட்டாகவும் மாற்ற ரூபாய் 100 கோடி வரை செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

- இப்படியாக பல காரணங்களால் இந்த RS100 ட்ரெண்டாகியிருக்கிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ