Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

65,000 ரூபாய்க்கு ஏப்ரிலியா 150சிசி ஸ்கூட்டர்!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் காட்சிபடுத்தப்பட்ட ஏப்ரிலியா SR 150 ஸ்கூட்டர், இரண்டு நிறங்களில் 65,000 ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ் ஷோரும் அறிமுக விலை) இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

வெஸ்பா 150 ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரும் விலையே 90,000 ரூபாயாக இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 125சிசி ஸ்கூட்டரின் விலையில், ஒரு 150சிசி ஸ்கூட்டரை வாங்க முடியும் என்பது வரவேற்கத்தக்கது. ஏப்ரிலியா SR 150-ன் விலையைக் கட்டுக்குள் வைக்க, 90 சதவிகிதம் உள்ளூர் பாகங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தி (மஹாராஷ்ட்ராவில் தொழிற்சாலை) உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வெஸ்பா தயாரிப்புகள் அனைத்தும் மெட்டல் பாடியைக் கொண்டிருக்க, ஏப்ரிலியா ஸ்கூட்டர் ஃபைபர் பாடியைக் கொண்டுள்ளது. அதே போல வெஸ்பாவில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இருக்க, ஏப்ரிலியாவில் அனலாக் ஸ்பீடோமீட்டர் தான் இருக்கிறது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில், வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் SR ஸ்கூட்டரில் 124சிசி இன்ஜின் இருக்க, இந்தியாவில் 150சிசி இன்ஜினுடன் வருகிறது SR 150. வெஸ்பாவின் 150சிசி ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில் SR 150 தயாரிக்கப்பட இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளது பியாஜியோ. இதில் இருப்பது அதே 154.4சிசி இன்ஜின்தான் என்றாலும், ஏப்ரிலியாவின் ஸ்போர்ட்டி இமேஜைக் கருத்தில் கொண்டு, CVT ட்யுனிங்கில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது. தவிர வெஸ்பாவைவிட ஏப்ரிலியாவின் எடை குறைவு என்பதால், நல்ல பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ் கியாரண்டி எனலாம்.

விலை அதிகமான வெஸ்பாவில் இல்லாத 32மிமீ டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், விலை குறைவான SR 150-ல் இருப்பது பெரிய பிளஸ். பைக் மற்றும் ஸ்கூட்டர் கலந்த ஸ்டைலில் வெளிவந்த ஹோண்டா நவி, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே SR 150-யை 14 இன்ச் அலாய் வீல்கள் கொண்ட க்ராஸ் ஓவராக வடிவமைத்திருக்கும் ஏப்ரிலியா, அதில். 220மிமீ டிஸ்க் - 140மிமீ டிரம் பிரேக்குகளைப் பொருத்தியுள்ளது.. பியாஜியோவின் டீலர்கள் மற்றும் மோட்டோப்ளக்ஸ் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட உள்ள ஏப்ரிலியா SR 150-ன் புக்கிங் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் பிரபலமான E-Commerce வலைதளங்களுள் ஒன்றான Paytm-ல், இந்த ஸ்கூட்டரை புக் செய்தால் 2,000 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். ஏப்ரிலியா SR 150-ன் டெலிவரி அடுத்த வாரம் முதலாக ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராகுல் சிவகுரு

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close