Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெரீனாவில் மடுவு மீன் சாப்பிட்டிருக்கிறீர்களா..?!

கடலில் மீனவர்கள் மீன் பிடித்து பார்த்திருப்போம். கரையில் நின்று வலை வீசி மீன் பிடிப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா.?

கரையிலிருந்து வலை வீசி மீன் பிடிக்கும் முறை தமிழகத்தின்  பெரும்பான்மையான மீனவப்பகுதிகளில் இருக்கிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள மெரினா கடற்கரைக்கு ஒரு ரவுண்ட்ஸ் போய் வரலாமா.?
  
 நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்  கிழமை நாளில், நல்ல கூட்டம். கல்லூரி மாணவர்கள் கடலோர காவல் துறையினரின் கண்டிப்பையும் மீறி கடலில் சாகசம். மாணவிகள் ஒரு புறம் அலையில் கால்வைத்தவாறு செல்பி எடுத்து கொண்டு கடற்கரையையே அலற விட்டுக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் குடும்பம் சகிதமாக பாப்கார்ன் , பஞ்சுமிட்டாய், ஹார்ஸ் ரைடிங் , பலூன் ஷூட்டிங் என சென்னை மக்கள் காற்று வாங்கி கொண்டிருக்க வழக்கமான மெரினா தான் அது என்றாலும். ஒருவர் மட்டும் யாரையும் பற்றி கவலைப் படாமல், தன் வேளையில் பிசியாக இருந்தார். அவரை சுற்றி நின்று கொண்டு எல்லோரும் ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தார்கள். என்னதான் செய்கிறார்  என நாங்களும் எட்டிப் பார்த்தோம்.

அவர் கையில் ஒரு வீச்சு வலை இருந்தது. கரையில் நின்று கொண்டு ஒவ்வொரு அலையாக 
கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடத்தில் வேட்டைக்கு தயாராவதைப் போல ரெடியாகி வலையை நன்றாக பிடித்துக் கொண்டு வீசத் தயாரானார். ஒரு சின்ன அலை அவரை கடந்தது தான் தாமதம். வலையின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு அலையில் வீசியெறிந்தார். சில நொடிகள் தான் வீசிய வலையை மடித்து எடுத்து கொண்டு மணற்பரப்புக்கு வந்தார் மொத்த கூட்டமும் அவரை சூழ்ந்து கொண்டது. மடிக்கப்பட்ட வலையை கொஞ்சம் கொஞ்சமாய் விரிக்க அதில் மீன்கள்  மாட்டிக்கொண்டது தெரிந்தது. ஒவ்வொன்றாய் அதிலிருந்து எடுத்து மணலில் தோண்டி வைத்திருந்த குழியில் 
போட்டுவிட்டு மீண்டும் வேட்டைக்கு தயாரானார்.

இப்படி கரையிலிருந்தே வலை வீசி கொஞ்சம் கொஞ்சமாய் மீன்களை மணற்குழியில் நிரப்பி கொண்டிருந்தவர் வலையில் ஏற்பட்ட கிழிசல்களை சரிசெய்ய உட்கார்ந்தார். அந்த சின்ன இடைவேளையில் சந்தித்தேன். 

உங்க பேரு என்னங்கய்யா, உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...?

 சிட்டிபாபு சார். இங்க தான் திருவல்லிக்கேணி மாத்தாங்குப்பத்துல இருக்கேன். 
பொண்ணு ஒன்னு இப்போ பிளஸ் டூ படிக்குது. சின்ன வயசுலேருந்து மீன் புடிக்கிறது தான் 
தெரியும். நமக்கு தான் படிப்பு இல்லாம போச்சு. அதான் புள்ளயா நல்லா படிக்க வைச்சுட்டு இருக்கேன். 

எப்படி ஒவ்வொரு அலையா கணிச்சு வலை வீசுறிங்க...?

(சிரிக்கிறார்)  இப்படி மீன் பிடிக்கிறதுக்கு பேரு மடுவு மீன்னு சொல்லுவாங்க சார்.  எப்போவாச்சும் கடல்ல மீன் குறையறப்போ கடலுக்கு நிறைய பேரு போக மாட்டோம். கடலுக்கு போவாத நேரத்துல இப்படி மீன் புடிப்போம். கடலுக்கு போட் எடுத்துட்டு போய் திரும்பணும்னா டீசல் செலவு, ஐஸ் வாங்குறது அது இதுன்னு நிறைய செலவு பிடிக்கும். அப்போவெல்லாம் வலைய எடுத்துக்கிட்டு கரைக்கு வந்துடுவோம். 
கடல் மட்டும் தான் சோறு போடும்னு  இல்ல. கரையும் சோறு போடும் சார்.  

ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீன் கிடைக்கும்...?

அத சரியா சொல்ல முடியாது சார். சில நாள் 10 கிலோ கூடவும் கிடைக்கும். சில நாள்ல ஒண்ணுமே கிடைக்காம கூடவும் திரும்புவோம். இதோ இன்னைக்கு காலைலேருந்து வலை வீசிட்டு இருக்கேன். மூணு கிலோ கிடைச்சுருக்கு. எப்படியும் வீட்டுக்கு போறதுக்குள்ள 5 கிலோ பக்கம் புடிச்சுருவேன்.

மெரினாவுக்கு  வர மக்களிடம் என்ன சொல்ல விரும்புறீங்க...?

எல்லோரும் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாம வராங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சில பேர் புள்ளைகுட்டிங்களோட அமைதியா வந்து வேடிக்கை பார்த்துட்டு போயிருவாங்க . காலேஜ் பசங்க வந்தா ஒரே சேட்டையா இருக்கும். இப்போவெல்லாம் சில பேர் குடிக்கிறதுக்குன்னே வராங்க சார்.
ஆனா யாருக்கும் நம்மள சந்தோசமா வைச்சுருக்க கடற்கரையை சுத்தமா வைச்சுக்கணும்னே 
தோன்றதில்ல. நினைச்ச இடத்துலயெல்லாம் வீட்டுல இருந்து கொண்டு வர குப்பைய வீசி எறிஞ்சுட்டு போறாங்க. நாம இருக்க இடத்தை நாம தான சார் சுத்தமா வைச்சுக்கணும்..! என்று சொல்லிவிட்டு 
மீண்டும் வலை வீச தயாரானார். 

- க. பாலாஜி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close