Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைனா இன்னா? டபாய்க்காம சொல்லு மச்சி!

வந்தாரை வாழவைக்கும் சென்னைனு மங்களகரமாக ஹேஸ்டேக் போட்டு வரவேற்றாலும் வந்த புதுசில் இந்த ஊர் நம்மை எக்குத்தப்பா எத்திவிட்டுக் கைகொட்டிச் சிரிக்கும். நம்மில் பாதிப்பேர் இந்தக் கொடுமைகளையெல்லாம் அனுபவிச்சுருந்தாலும் அசராமல் கடந்து வந்திருப்போம்.

* முதல் நாள் ஊரிலிருந்து வந்தப்போவே பெரும்பாக்கமோ, மேடவாக்கமோ தாம்பரம் பக்கத்துல இருக்குனு தெரியாமல், ட்ராஃபிக்கில் திண்டாடி வெயில் மண்டையைப் பிளக்கும் பத்துமணிக்கு கோயம்பேடு போய் இறங்கியபின்புதான் "அதுக்கு ஏன்யா இங்கே வந்தே.. தாம்பரத்துலேயே இறங்க வேண்டியதுதானே..." எனச் சாதாரணமாக சொல்வார்கள். நானே ரணமாகி வந்துருக்கேன்யா... வந்த வழியிலேயே போறதுக்கு பஸ்ஸையாச்சும் காட்டுங்கனு சொல்லி வெதும்பியிருப்போம்.

* எந்த பஸ் ஸ்டாப்பில் நின்னாலும் 'பிராட்வே' னு போர்டு வெச்ச பஸ் வந்துக்கிட்டே இருக்கும். அது ஒரு இடம் போலன்னு நினைச்சு மெரினா பீச் போற பஸ்ஸுக்காக மணிக்கணக்காகக் காத்துட்டு இருந்துருப்போம். யார்கிட்டேயாவது பஸ் கேட்டால், "படிச்சவன் மாதிரியே இருக்கே... பஸ்கூடப் பார்த்துப் போகத் தெரியாதா?"னு கேட்ருவாய்ங்களோன்னு பயந்துக்கிட்டே ரொம்பநேரம் கழிச்சுக் கேட்டா, போற பஸ் பூராம் அங்கேதான்யா போகுதுனு சொல்லி மனசுக்குள்ளேயே மனசு உடைஞ்சு அழ விடுவாய்ங்க.

* எல்லாப் பக்கமும் ஒன்வேயாக மாற்றிவைத்து இறங்குவது எந்தப் பக்கம், ஏறுவது எந்தப் பக்கம் எனத் தலைகால் புரியாமல் தலைகீழாகச் சுற்றவிடுவார்கள். கால் கடுக்கக் காத்திருந்த பின்புதான் 'ஒருபக்கமாவே எல்லா வண்டியும் போகுதே'னு மைல்டா டவுட் வரும்.

* பக்கத்துத் தெருவில் இருக்கும் இடத்துக்கு வழி தெரியாமல் ஆட்டோக்காரரைக் கேட்டால், அதுக்கு இங்கேயெல்லாம் பஸ் வராது. ஆட்டோவில் ஏறுன்னு உட்கார வெச்சு பக்கத்து ஏரியாவைச் சுற்றிக்காட்டி வந்த வழியிலேயே இறக்கிவிட்டு நூறு ரூபாய் வாங்குவார்.  "இதே மாதிரி அங்கேயும் சிக்னல் இருந்துச்சுல்ல..." என வியந்துகொண்டே தெரிந்தவர் வீட்டுக்குப் போனபிறகுதான் மேட்டரே தெரியும். எவ்வளவு ட்ரிக்கா ஏமாத்திட்டாய்ங்க.

* ஷாப்பிங் மால்கள் வாங்குவதற்கான இடம் அல்ல. சுற்றிப் பார்ப்பதற்கான இடம் என்பதுபோலவே பல ஞாயிற்றுக்கிழமைகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிவோம்.

* ஹோட்டல்களில் டிஷ்யூ பேப்பர்களைத் தருவதற்கு முன்பாகவே கையை பாக்கெட்டில்விட்டுத் துடைத்துவிட்டு யாரும் பார்க்கிறார்களா எனச் சுற்ற்ம்முற்றும் பார்ப்போம்.

* மெரினா பீச்சில் விளையாடும் வெளிநாட்டவர்களைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதைப்போல் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்போம்.

பின்னர் எல்லாம் பழகி, நாமளும் பென்சில் ஃபிட் பேன்ட்டும், ஸ்லிம் லாங் சட்டையும் போட்டு சிங்காரச் சென்னையின் சகவாசியானதும், பவர் சோப் வாங்கவும், பொட்டுக்கடலை வாங்கவும்கூட சூப்பர் மார்க்கெட்டுகளுக்குத்தான் செல்வோம். அப்புறம் 'நம்ம ஊரு மெட்ராஸு...' ஆகிவிடும்.

வாட்ஸ் டைம் நவ் ட்யூட்? 


- விக்கி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ