Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குண்டுக்கண்ணா.... வெண்ணெய் திருடும் மன்னா! #KrishnaJayanthi

இன்று கிருஷ்ணனின் பிறந்ததினம்...வானளாவ வளர்ந்து நின்று பாரதப் போரில் அர்ஜூனனுக்கே பாடம் சொன்ன ஆசிரியரானவன் அவன் என்றாலும், கண்ணன் என்றாலே வெண்ணெயும், குழந்தை உருவமும்தான் முதலில் நினைவுக்கு வரும்.

குழந்தை என்றாலே கேலி, களிப்பு, சேட்டை, விளையாட்டு என்பதையெல்லாம் இக்கால குட்டீஸ்களுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் கூட கற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது கண்ணன் கதைகள். குறும்பு செய்தாலும் அது மற்றவர்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கண்ணனின் வாழ்க்கையாக நம்மிடையே பதிவு செய்யப்பட்டுள்ள கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள், மதம் சார்ந்த வடிவமைப்பு என்பதையெல்லாம் தாண்டி நட்பு, பணிவு, மரியாதை என்று நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன கற்றுக் கொள்ளக் கண்ணனிடம்... அதில் சிலவற்றைக் குட்டிக் கதையாகப் பார்க்கலாம்...

கண்ணனும், வெண்ணெயும்:


குட்டிக் கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் ரொம்பவே இஷ்டம். பிருந்தாவனத்தில் எல்லாருடைய கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு வெண்ணெய் திருடி தின்பதே அவனது வேலை. எத்தனையோ தடவை அம்மா யசோதா அறிவுரை கூறியும் குட்டிக் கண்ணன் திருந்தவில்லை.

ஒருநாள் எல்லாக் குழந்தைகளையும் ஒன்று திரட்டி, வெண்ணெய் பானையை உடைக்கும்போதே அம்மா யசோதா வந்துவிட்டார். எல்லாக் குழந்தைகளும் ஓடிவிட்ட நிலையில் கண்ணனுக்கு யசோதாவிடமிருந்து அடி கிடைத்தது. 

நீதி: வயதில் மூத்தவர்களின் பேச்சை கேட்க வேண்டும். 

காளிங்க நர்த்தனன்:

ஒருமுறை ஐந்து தலை நாகமான காளிங்கன், பிருந்தாவனத்திற்குள் ஊடுருவினான். அங்கிருக்கும் நதிநீரையெல்லாம் விஷமாக்கினான். கால்நடைகளும், மனிதர்களும் அந்தத் தண்ணீரைக் குடித்து உயிரிழந்துவிட்டனர். உடனடியாக, குட்டிக் கண்ணன், காளிங்கனின் மீதேறி நடனமாடி, அவனுடைய விஷத்தை செயலிழக்கச் செய்து காளிங்கனை அடக்கினார். 

நீதி: நல்லவை மட்டுமே ஜெயிக்கும்; ஆணவம் ஒருகட்டத்தில் அழிந்து போகும்.

கொடுக்கக் கொடுக்க கிடைக்கும்:

ஒருநாள் பிருந்தாவனத்திற்கு பழங்கள் விற்கும் பெண்மணி ஒருவர் வருவார். அவரிடம் பழங்களை வாங்க குட்டிக் கண்ணன், தன்னுடைய பிஞ்சுக் கைகளால் தானியங்களை அள்ளி வருவான். ஆனால், எல்லா தானியங்களும் கீழே சிந்தி விடும். உடனடியாக நெகிழ்ந்து போன பழம் விற்கும் பெண்மணி, கைநிறைய பழங்களை எடுத்துக் கண்ணனுக்கு கொடுத்துவிடுவார். வீட்டிற்கு சென்று பார்க்கும்போது பழம் விற்கும் பெண்மணியின் கூடை முழுவதும், நகைகளும், பணமும் நிறைந்திருக்கும்.

நீதி: அன்போடு ஒருவருக்குச் செய்யும் நன்மை, இரண்டு மடங்காக நமக்கே திரும்பிக் கிடைக்கும்.

நட்பே உலகில் சிறந்தது:


கண்ணனின் நீண்ட நாள் நண்பர் சுதாமர்(குசேலர்). மிகவும் ஏழ்மை நிலையில் தவிக்கும் சுதாமர், துவாரகையின் அரசனாக விளங்கும் கண்ணனின் உதவியை நாடி வருவார். கையில் பிடி அவலை, கிருஷ்ணருக்கு அன்பளிப்பாக கொண்டுவரும் சுதாமரிடம், அதை வாங்கி உண்பார் கண்ணன். எந்த உதவியும் கேட்காமல், நண்பரைப் பார்த்த மகிழ்ச்சியில் வீடு திரும்பிவிடுவார் சுதாமர். ஊரில் வந்து பார்க்கும்போது அவருடைய குடிசை, மாளிகையாகவும், மனைவி, மக்கள் நல்ல உடையுடன் காட்சியளிப்பார்கள். 

நீதி: ஏற்றத்தாழ்வுகள் அற்றதாக நட்பு விளங்க வேண்டும். நண்பர்கள் துயரத்தில் வருந்தும்போது ஓடிவந்து காரணம் கேட்காமல் உதவி செய்வதே நல்ல நட்பு. 

சாதி, மதங்களையெல்லாம் கடந்து நாம் கடவுளாக வணங்கும் எல்லாமே, மனித வாழ்க்கைக்கான நன்நெறிகளைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொண்டால் என்னாளும் பொன்னாளே!

-பா.விஜயலட்சுமி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ