Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிப்ரா, திலேப்பியா... மனிதர்களின் கவனத்துக்கு...!

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், உயிரியல் துறையில் ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் மாணவர்கள் பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவரான சுகன்யா, கங்கை நதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜிப்ரா மீன்களில் ஆராய்ச்சி செய்து வருகிறார். 

அது குறித்துப் பேசிய சுகன்யா, "இந்த ஜிப்ரா மீன்கள் கங்கை நதியிலதான் அதிகமா இருந்துச்சு. ஆனா, கங்கையில் அதிக கழிவுகள் கலந்ததால இந்த மீன் வகை அழிஞ்சுட்டே இருக்கு. இதை 'ஆர்னமெண்டல் ஃபிஷ்' வகையில சேர்த்துட்டதால இப்போ அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகள்லதான் அதிகமா வளர்த்துட்டு இருக்குறாங்க. இந்த மீனோட மரபணுவும் மனிதர்களோட மரபணுவும் 75 சதவிகிதம் ஒத்த தன்மையில் இருக்கு. அதனால மனிதர்களுக்கான மருந்துகளைப் பரிசோதிக்க இந்த மீன்களைப் பயன்படுத்த முடியும். பொதுவா, எலிகள் மாதிரி உயிரினங்களை பரிசோதனைக்கு உட்படுத்துறதுக்கு முன்னாடி 'எத்திக்கல் அப்ரூவல்' வாங்கணும். அந்த மீன் வகையை பரிசோதனைக்கு பயன்படுத்துறதுக்கு எத்திக்கல் அப்ரூவல் தேவையில்லை. அதனால, பல வித பரிசோதனைகளுக்கு இந்த மீனைப் பயன்படுத்தலாம். நான், இரும்பு மீநுண்துகள்கள் (அயர்ன் நானோ பார்டிக்கிள்ஸ்) நம்ம உடம்புக்குள்ள என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்கிறதை இந்த மீன்கள் மூலமா ஆராய்ச்சி செய்துட்டு இருக்கேன். இரும்புச்சத்து உடம்புக்கு தேவையான சத்தா இருந்தாலும், அது அதிகமாச்சுனா கணையம், கிட்னி எல்லாத்துலயும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பா, இரும்பு பட்டறையில வேலை பார்க்குறவங்க, லேத்ல வேலை செய்றவங்க, இரும்புச்சத்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுறவங்க எல்லாத்துக்கும் இரும்பு மீநுண்துகள்களால பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. அவங்களை அறியாமலே இரும்பு துகள்கள் உடம்புக்குள்ள படிஞ்சு பாதிப்பை ஏற்படுத்தும். அதுக்கான விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்கிற நோக்கத்துலதான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன்" என்றார்.

மனிதர்களுக்கு ஏற்றது திலேப்பியா மீன்கள்தான்!

இதே துறையில் முதுநிலை ஆராய்ச்சி மாணவரான ரமேஷ், திலேப்பியா மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். அதுகுறித்துப் பேசியவர், "திலேப்பியா மீன்களை வட்டார வழக்குல 'ஜிலேபி கெண்டை'னு சொல்வாங்க. இந்த மீன் எல்லா இடத்துலயும் வளரக்கூடியது. வணிக ரீதியா அதிகம் விற்பனை ஆகக்கூடிய மீன் இது. ரொம்ப மலிவான விலைக்கு கிடைக்கிற இந்த மீன்தான் மனிதர்கள் சாப்பிடுதற்கு ரொம்ப ஏற்றது. ஏன்னா, இந்த மீனுக்கு அனைத்து கழிவுகள், டாக்ஸின்கள் எல்லாத்தையும் நச்சு இல்லாத பொருளா மாத்தக்கூடிய தன்மை இருக்கு.

தொழிற்சாலை கழிவு நீர்ல கூட இந்த மீன் வளரும். அப்படி வளர்ந்த மீனை நாம சாப்பிட்டால் கூட நமக்கு பாதிப்பு வராது. கழிவுநீர் கலக்குற நீர்நிலைகள்ல இந்த மீனை அதிகளவுல விட்டா டாக்ஸின்கள் குறைக்கப்படும். இது குறித்த ஆராய்ச்சியிலதான் நான் ஈடுபட்டிருக்கேன். இந்த மீன், கொடிய வேதிப்பொருளான மக்னீஷியம் ஆக்ஸைடைக் கூட தாங்கி வளருது" என்றார். 

- ஜி.பிரபு,  படங்கள்: வீ.சிவக்குமார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ