Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு பள்ளிக்கு கிளம்ப பத்து ஐடியாக்கள்!

 

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை ஐந்து வயதில்தான் சேர்ப்பார்கள்.  ஆனால்  இப்போது, இரண்டரை அல்லது மூன்று வயது ஆனதுமே கேஜி வகுப்பில் சேர்க்க, பெற்றோர்கள் வரிசையில் நிற்கிறார்கள். தான் விரும்பும் ஸ்கூலில்  சீட் கிடைத்துவிட்டாலே, பெற்றோர்களுக்கு அது ஒலிம்பிக் சாதனைதான்.

முதல் நாள், அம்மாவும் அப்பாவும் குழந்தைகளிடம் கொஞ்சிப்பேசி ஸ்கூலில் கொண்டுபோய் விடும்போதே, பலர் அழுவார்கள். அதிலும் ஒரு குழந்தை அழுதால் போதும் அதைப்பார்த்து எல்லா குழந்தைகளும் அழத்தொடங்கிவிடும். இதுபோல தினம்தினம் போராடவேண்டியிருக்கும். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவர்களாகவே ஜாலியா பள்ளிக்குச் செல்ல எப்படித் தயார்படுத்தலாம்?

1. தூக்கத்திலிருந்து எழுப்பும்போது அதட்டலோ, பரபரப்போ இல்லாமல் எழுப்பி, குழந்தை விரும்பிக் குடிக்கும் பானத்தைக் குடிக்கக் கொடுங்கள்.

2 யூனிஃபாம் போட்டுக்கொண்டதும், 'குட் பாய்' என்று சொல்லி, பிடிச்ச சாக்லேட்டை பாக்கெட்டில் வைத்தால் சந்தோஷமாக இருக்கும்.

3  'மிஸ், உன்னை நல்லா பார்த்துக்குவாங்க; கதை சொல்லுவாங்க; ரைம்ஸ் சொல்லித்தருவாங்க' என்று ஆசிரியைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள்.

4 பென்சில் பாக்ஸைத் திறக்கும்போது, அதில் வேஃபர் பிஸ்கட் ஒன்றை வைத்திருந்தால் முகத்தில் சிரிப்பு பூக்கும்.

5 மதியம் லன்ச் பாக்ஸைத் திறக்கும்போது, உணவின் மீது, 'உனக்குப் பிடிச்ச லன்ச்' என சாஸால் எழுதிவைத்தால், மிச்சம்வைக்காமல் சாப்பிடுவார்கள்.

 

6 முதல் மார்க் எடுத்தால் சின்னப் பரிசு வாங்கித்தாருங்கள்; ஆனால் முதல் இடம் பிடித்தே ஆக வேண்டும் எனக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

7 பள்ளி நண்பர்களை விளையாடச் சொல்லுங்கள். ஆனால், 'விளையாடும்போது கீழே விழுந்துடாதே' என்று எதிர்மறை வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

8 பிரேயர் ஆரம்பிக்க பத்து நிமிடம் முன்பாகவே பள்ளியில் கொண்டுபோய் விட்டு விடுங்கள். அப்போதுதான், பிரேயரில் கலந்துகொள்ளும் விருப்பம் உண்டாகும்.

9 விளையாடும்போது சட்டையில் கறை பட்டுவிட்டால், அடிக்கவோ திட்டவோ கூடாது. 'துவைத்தால் போய்விடும்' என்று சொல்லுங்கள்.

10 பள்ளியில் எழுதியதைக் காண்பித்து, நான் 'வெரிகுட்' வாங்கியிருக்கிறேன் என்றால், சூப்பர் என்று பாராட்டுவதோடு, அவன் விரும்பும் சின்னப் பரிசும் கொடுக்கலாம்.

-கே.ஆர்.ராஜமாணிக்கம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ