Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விதியினை நிதியால் வெல்வோம்...! #Personal finance-2

"தம்பி... நேத்து 10% சேவ் பண்ணனும், 90 % இன்வெஸ்ட் பண்ணனும்னு சொன்னீங்க சரி. ஆனா... எப்படி காச மிச்சம் பண்றதுன்னு சொல்லவே இல்லையப்பா.... என் தல விதி... என்னால காச மிச்சப்படுத்தவே முடியல... என்ன தம்பி செய்யுறது...?"

இதுக்கு ஒரே வழி பட்ஜெட் தான்...

"தம்பி, நாங்கல்லாம் போடாத பட்ஜெட்டா"ன்னு, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் கணக்கா கேக்காதீங்க. பொதுவா நம்ம போடுற பட்ஜெட்ல தப்பில்லங்ண்ணா, ஆனா டோட்டல் பட்ஜெட்ல தான்  தப்பு. 

"தம்பி என்ன கொளப்புறீங்க...! தெளிவா சொல்லுங்க..."

நம்ம போடுற பேப்பர் பட்ஜெட்ல தப்பில்ல, ஆனா நடைமுறைல அத செயல்படுத்துறதுல தான்  தப்பு வந்துடுது.

"தம்பி...! இப்பவும் புரியல..".

ரைட்டு விடுங்க. ஒரு உதாரணம் சொல்றேன்... உங்க சொந்த ஊர் மதுரை, நீங்க குடும்பத்தோடு தங்கம் ரீகல் தியேட்டர்ல மாசத்துக்கு இரண்டு தடவ சினிமாவுக்குப் போக  பிளான் பண்றீங்க. ஒரு டிக்கெட் 100 ரூபா. ஆக நீங்க, உங்க  மனைவி, உங்க இரண்டு குழந்தைகள் படம் பாக்க பட்ஜெட்ல, ஒரு முறைக்கு 400 ரூபாய் எழுதுறீங்க. இது உங்க பேப்பர் பட்ஜெட். இது ஓகே.

இப்போ நீங்க கபாலி படத்துக்கு குடும்பத்தோட காலையில 11 மணி ஷோவுக்கு  கெளம்பிட்டீங்க, உங்க வீடு மதுரை, அண்ணாநகர் சாத்தமங்கலத்துல இருக்கு. அங்கிருந்து தங்கம் ரீகல் தியேட்டருக்கு 5 கிலோமீட்டர். நீங்க டூவீலர்ல கெளம்பி தியேட்டருக்கு போயிட்டீங்க.

கடங்கார தியேட்டர்காரன், அன்னயிலேர்ந்து தான் பார்க்கிங் சார்ஜை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாய் ஆக்கிட்டான். நீங்களூம் பெருசா கண்டுக்காம 20 ரூபாய் கொடுத்துடுறீங்க. அடுத்து... டிக்கெட் எடுக்க போறீங்க. 100 ரூபாய் டிக்கெட் இல்ல, 120 ரூபாய் டிக்கெட் தான் இருக்கு. சரின்னு 120 ரூபாய் டிக்கெட்டுல 4 எடுத்துர்றீங்க.  நல்ல ஏசி தியேட்டர்... அருமையா கபாலி படம் ஓடிக்கிட்ருக்கு. கபாலிய சுட்டுட்டாங்க. இன்ட்ரவெல் விடுறாங்க. மணி 12.30 நண்பகல்.

குழந்தைங்க சாப்பிட ஸ்நாக்ஸ் கேக்குதுங்க... வீட்டுக்கு போய் சாப்பிடலாம்னு சொல்றீங்க. அடுத்து பசங்க அம்மாக்கிட்ட கோரிக்கை வைக்குறாங்க...அவங்க குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு எங்கேயோ  போறாங்க. 10 நிமிஷம் கழிச்சி வந்து... உங்க மனைவி உங்க கிட்ட ஒரு பேப்பரை குடுக்குறாங்க. 

என்னடான்னு நீங்க பிரிச்சி பார்க்குறீங்க   

2 Veg. Puffs X 15 =  30

1 Lays Chips X 25  = 25

1 Coffee X 15 =  15

1 Fanta 500 ml X 40  =  40

2 Bisleri 1 lit X25 = 50

Total-------------------------------160

அப்படின்னு   கேன்டீன்காரன் பேப்பர்ல கிறுக்கி இருக்கான்.

"காலைல 9 மணிக்கு சாப்பிட்டது. மணி இப்போ 12.30 ஆயிடுச்சு. அதான் வாங்கிக் கொடுத்தேன். அந்த கடையில தான் வாங்குனோம். பணத்த கொடுத்துட்டு சீக்கிரம் வந்துடுங்க... படம் போட்டுட போறாங்க"ன்னு சொல்றாங்க உங்க அன்பான மனைவியும், அழகான குழந்தைகளும்.

நீங்களும் சரின்னு வழக்கம் போல காச கொடுத்துட்டு, கபாலிக்கு என்ன ஆச்சுன்னு, எக்ஸைட்மென்டோட மீதி படத்தை பாக்க போய்ட்றீங்க.

படம் முடிஞ்சதும் எல்லாரும் வெளிய வர்றாங்க, நீங்களும் கபாலிய கொன்னுட்டாங்களே படுபாவிங்கன்னு சோகமா வெளிய வர்றீங்க,  வெளிய வந்து பாத்தா நல்ல மழை.

"என்ன பங்கு.... கோட காலத்துல இப்புடி மழை பெய்யுதே"ன்னு மத்தவங்க பேசிக்குறாங்க.

நீங்களும் கபாலி செத்தத மறந்துட்டு மழை, இசை, இளையராஜான்னு மழைய ரசிக்கிறீங்க. 10 நிமிஷம் நின்னு பாக்குறீங்க  மழை நிக்கல. உடனே உங்க மனைவி.....

"ஏங்க, மழை விட்ற மாதிரி தெரியல நானும் பசங்களும் ஆட்டோல போய்ட்றோம், நீங்க வண்டிய எடுத்துக்குட்டு வீட்டுக்கு வந்துடுங்க"ன்னு சொல்றாங்க. 

அமைதியா, 100 ரூபாய் காச மனைவிகிட்ட கொடுத்துட்டு, மழையில நனைஞ்சிக்கிட்டே வீட்டுக்கு வண்டிய விட்றீங்க.

இப்போ சொல்லுங்க அண்ணே, சினிமாவுக்கு எவ்வளவு செலவு ஆச்சு..?

டிக்கெட் - 480, ஸ்நாக்ஸ் - 160, பார்க்கிங் - 20, ரிட்டன் ஆட்டோ - 100 ன்னு கணக்கை சரியா போட்றீங்க. ரெண்டு படம் பார்க்க வேண்டிய காசுல ஒரு படத்த பாத்துட்டு வர்றீங்கங்குறதும் புரியுது. ஆனா மறுபடியும் ரெண்டு வாரம் கழிச்சு அதே மாசத்துல படம் பார்க்க போறீங்கன்னா உங்க நிதி நிலைமை மேலும் பிரச்னைக்கு உள்ளாகும்.

இது ஒரு உதாரணம். இது மாதிரி எத்தனை செலவுகளை வழக்கத்தை விட அதிகமா செஞ்சிருப்போம்னு கணக்கு போட்டு பாருங்க. ஒரு நாளைக்கு ஆஃபீஸ்ல எடுத்துக்குற டீயில ஆரம்பிச்சு, வெளிய தேவை இல்லாம நண்பர்களுக்கு கொடுக்குற ட்ரீட் வரைக்கும் கணக்கு போட்டு பாருங்க...

ஸோ..,  சரியா பட்ஜெட் போட்டு, கச்சிதமா ஃபாலோ பண்ண சூப்பர் ஐடியாக்கள் :

1. வீட்டுல மொதல்ல மனைவி, கணவன் ரெண்டு பேரும் சேர்ந்து பட்ஜெட் போடுங்க. 

2. ஒரு மாசம் ஒருத்தர் பேப்பர் பட்ஜெட் போடுங்க, ஒருத்தர் பிராக்டிக்கலா கடைக்கு போய் பொருட்கள் வாங்கிட்டு வாங்க. அப்ப தான் பேப்பருக்கும், பிராக்டிக்கலுக்கும் என்ன வித்தியாசம் ஏற்படுதுன்னு புரியும்.

3. குழந்தைகளையும் பட்ஜெட் போடுறப்போ கூட வெச்சுக்கோங்க. 

4. ஒரு முறை கனவன் தன்னுடைய செலவை குறைச்சுக்கணும், ஒருமுறை மனைவி தன் செலவுகளை குறைஞ்சிக்கணும். 

5. செலவு கூடுதலாக போனால் செலவு செய்தவரிடம்  காரணத்தை கேளுங்க, சரி என்றால் அனுமதிக்கலாம், தவறுன்னா சரி செய்ய பாருங்க

ஸோ ஒன்ஸ் எகெயின்... 

" விதியினை நிதியால் வெல்வோம் " தவறுகளைத் திருத்துவோம்.

மு.சா.கெளதமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ