Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலர் கலரா ரீலு - ஜித்து ஜில்லாடி விளம்பரங்கள்

தொலைக்காட்சிகளில் தினசரியும் ஒளிபரப்பாகும் சீரியலின் மொத்த அரைமணி நேரத்தில், பத்து நிமிடங்களுக்கும் மேல் விளம்பரங்கள் தான் ஒளிபரப்பாகின்றன. ரிமோட்டைத் தேடியெடுத்து சேனல் மாற்றினால் மற்றொரு சேனலிலும் அந்த நேரத்தில் விளம்பரம் தான் ஒளிபரப்பாகிறது. விளம்பரங்களிலும் என்னென்ன அட்ராசிட்டிகள் செய்கிறார்கள் எனப்பார்த்தால்...

வாடகைக் காரில் ஏசி போட்டுக் கொண்டு போகும்போதுகூட வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. நிலைமை இப்படியிருக்க தொண்டை கிச் கிச்சைப் போக்கும் ஐம்பது காசு மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டால் சுவிட்சர்லாந்தைப் போல் க்ளைமேட் மாறிப்போவதாய் காண்பிப்பதெல்லாம் கம்பன் பாடாத சிந்தனை ஒரு பொண்ணப் பார்த்ததும் பையன் தன் கண்ண மூடி மெய்மறந்து, அந்தப் பொண்ணு பின்னாடியே நடக்க ஆரம்பிக்கிறான். இந்த கான்சப்ட் எந்த விளம்பரத்துலயோ வரும்ல்லன்னு நீங்க யோசிக்கறது புரியுது. ரொம்பல்லாம் யோசிக்காதீங்க. டூத்பேஸ்ட், ஃபேர்னஸ் கிரீம், நகைக்கடை, புடவைக்கடை என எல்லாத்துக்கும் இந்த ஒன்லைன் தான் எவர்க்ரீன் கான்சப்ட். 


பார்த்தவுடன் என்னாங்கடா இதுன்னு நம்மள சொல்லவைக்கிறதுல பெர்ஃப்யூம் விளம்பரங்கள் என்னைக்குமே முதலிடம்தான். பேர் பாடியா நின்னுக்கிட்டு எக்கச்சக்கமாய் பெர்ஃப்யூம் அடித்தால் எப்பேற்பட்ட சூப்பர் பிகரும் மடிந்துவிடுமென பசங்களுக்கு அநியாயத்துக்கு நம்பிக்கையை விதைத்து பல்பு வாங்க வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி பெர்ஃப்யூம் விளம்பரங்களில் நடிக்கும் மாடலுக்கு கண்டிப்பாக இந்திய முகச்சாய்லே இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதிபோல!


முன்னல்லாம் வேஷ்டி விளம்பரம்ன்னா கம்பீரமா நடந்து வர்றது, மேடைல ஏறி நிற்கறதுன்னு கெளரவமா இருக்கும். இப்பல்லாம் சிக்ஸ் பேக் வச்சிருக்குற ஆளுங்க, தொடை தெரிய வேஷ்டியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு சண்டையிடுவதும், ஆக்ரோஷமாய் முகத்தை இறுக்க வைத்துக் கொள்வதுமாய் ட்ரென்ட் மாறிவிட்டது.


பனியன் போட்டுட்டு பக்கத்து வீட்டத் தாண்டிப் போனாலே நம்மள மேலயும் கீழயும் பார்ப்பாங்க. விளம்பரத்துல என்னடான்னா ஹாயா ரோட்ல நடக்கறமாதிரியும், மொத்த ஊரே இவர்களைப் பார்த்து ஆச்சர்யப் பார்வை பார்க்குறதும்... அடங்கப்பா!

இதெல்லாம் ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கம் கூல்ட்ரிங்ஸ் குடிக்க ஹெலிகாப்டர் புடிச்சு வர்றது, மலை உச்சிலருந்து தாவிக்குதிக்கறதெல்லாம் தனி வகை. சேனல் மாத்துவோம்!

- கருப்பு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ