Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு ஜீப்பின் விலை 71.59 லட்சம்..! இந்திய சாலைகளில் முதல்முறையாக....

கார் ஆர்வலர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஜீப் நிறுவனம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வந்துவிட்டது. ரேங்ளர் Unlimited, கிராண்ட் செரோக்கி, கிராண்ட் செரோக்கி SRT ஆகிய கார்களை முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது ஜீப். வடக்கு அமெரிக்காவில் இருக்கும் ஜீப்பின் கார் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து CBU முறையில் 3 கார்களும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், எதிர்பார்த்தபடியே இதன் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே பிஎம்டபிள்யூ X5 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLE ஆகிய கார்களுடன் போட்டியிடக்கூடிய கிராண்ட் செரோக்கி, விலையில் அடுத்த செக்மென்ட் கார்களுடன் போட்டி போடுகிறது. ஆனால் பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவிகளான போர்ஷே கயென் டர்போ மற்றும் பிஎம்டபிள்யூ X6M ஆகிய கார்களுடன் போட்டியிடக்கூடிய கிராண்ட் செரோக்கி SRT-ன் விலை ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. அஹமதாபாத் மற்றும் டெல்லியில் முதற்கட்டமாக டீலர்ஷிப்களை துவக்கியுள்ள ஜீப், வரும் அக்டோபரில் சென்னை மற்றும் மும்பையில் டீலர்ஷிப்களை நிறுவ உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், சண்டிகர், கொச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களில் டீலர்ஷிப்களை எதிர்பார்க்கலாம் என ஜீப் தெரிவித்துள்ளது. 

1986-ல் இருந்து தயாரிப்பில் இருக்கும் ரெட்ரோ டிஸைனைக் கொண்டுள்ள ஆஃப் ரோடர் வாகனமான ரேங்ளர், 5 கதவுகள், 238மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக வீல்பேஸைக் கொண்டுள்ள Unlimited வேரியன்ட்டில் வெளியாகியுள்ளது. இதில் 200bhp பவர், 46kgm டார்க், 12.1 கிமி அராய் மைலேஜையும் வெளிப்படுத்தக்கூடிய 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான விஷயம் என்னவென்றால், தேவைப்பட்டால் காரின் ரூஃப் மற்றும் கதவுகளைக் கழட்டிக் கொள்ளலாம் என்பதுடன், Washable கேபின் அடிக்கடி ஆஃப் ரோடி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close